பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 67

கண்ணாடியிருக்கிறது. குங்குமத்தை இட்டுக்கொள்வாள். Sticker அல்ல. மஞ்சளும் எலுமிச்சையும் சேர்ந்த சிவப்பு. எப்படிக் காத்தால் என்ன? வேளை வந்துவிட்டால் யாரும் தடுக்கமுடியாது. நியதி நமக்கு அப்பாற்பட்டது.

“சரி மாமி ஒண்னு செய்யறேன். நான் இந்த வீட்டை அலம்பிவிடப்போறேன். நீங்கள் ஏதேனும் பதில் சொன்னால் நான் கேட்கப் போறதில்ல்ை' துடைப்பத்தை யும் பக்கட்டையும் துக்கிக் கொண்டு போய்விட்டாள். அம்மா புன்னகையுடன் குழம்பைக் கிளறுகிறாள். விசாலம் பார்க்க மெதுவாய்க் காட்டுகிறாளே யொழிய காரியத்தில் இறங்கிவிட்டால் வேறேயாகி விடுகிறாள். உட்கார்ந்து, 'புருஸ்ஸை இழுத்து இழுத்துத் தேய்த்து தரை பளபளக்கிறது. அவளுக்கு முகம் சிவக்கிறது. ஏதோ உள் உவகையில் கண்கள் பளபளக்கின்றன. உழைக்கும் கரங்கள் சும்மாயிருக்க முடியாது.

மதியம் பனிரண்டுக்கு அம்மாவும் விசாலமும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ‘மாமி எனக்குக் கெட்டபழக்கம் பண்ணி வெக்கப்போlங்க. இந்தவேளைக்கு பசிக்கப் போவுது.”

"அப்படி ஒண்ணும் கவலைப்படாதே. நமக்குச் சொன்னத்தைக் கேக்கற பசிதான். வைத்திக்கு நாழி கழிச்சு சாப்பிடறானே. அவனுக்குப் பசிக்காது?”

“ஒரு பருக்கை-1 மூச்சு விடமுடியாது. சாமி கைங்கரியம் ஆச்சே! சூரியன் உச்சி ஏறினப்போ, வர்றப்போ கண்ணிலே உசிர்வந்துடும். அப்போ ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான் நாங்களும்தான். எங்களுக்கு வவுறு கொஞ்சம் பெரிசு தான.

“வேலை செய்யலே? விதவிதமா சாப்படlங்களா?”