பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 117

இப்போது நான் கனவு காண்கிறேனோ, அல்லது, சரியான உணர்வோடு இருக்கிறேனோ என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! எங்களை யாரோ பெரிய மனிதர்கள் என்று தப்பாக நினைத்துத் தாங்கள் பேசுகிறீர்கள்? நாங்கள் நிரம்பவும் ஏழ்மையான நிலைமையில் இருப்பவர்கள் என்பதை தாங்கள் அறிந்து கொண்டீர்களா? இப்போது நாங்கள் குடியிருக்கும் வீடு கூட வாடகை வீடு; எனக்கு இந்த உலகத்தில் என்னுடைய மகன் தான் செல்வம்; அவன் பார்க்கும் உத்தியோகம்தான் பூஸ்திதி: அதிலிருந்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில்தான் எங்களுடைய ஜீவனம். தாங்களோ கோடீசுவரர்கள். தாங்கள் எங்கே? நாங்கள் எங்கே? மலைக்கும் மகசத்துக்கும் எவ்வளவு தார தம்மியம் இருக்குமோ அதற்கு மேல் அதிகமான தாரதம்மியம் நமக்குள் இருக்கிறதே. தாங்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்தால் தங் களுக்கு ஒருவேளை விருந்து செய்ய எங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? அப்படிப்பட்ட பரம ஏழைகளான எங்கள் வீட்டில் தாங்கள் சம்பந்தம் செய்து கொள்ளப் பிரியப்படுவதாகச் சொல் வதை முதலில் என்னுடைய காதுகளே நம்பவில்லை!” என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், 'நான் சொல்வதில் அப்படிப்பட்ட புதுமை ஒன்றுமில்லையே. கொஞ்ச நேரத்திற்கு முன்னே, நான் சொன்ன விஷயத்தை நீங்கள் இதற்குள் மறந்து போய் விட்டீர்களா? எங்களுக்குச் சமமான பணக்காரர்களுடைய வீட்டில் பெண்ணைக் கொடுத்தால் எங்களுடைய சொத்து எல்லாம் சீர்குலைந்து போகும் என்றும், அதற்காக சாதாரணமாக நிலைமையிலுள்ள ஒருவருக்கே பெண்ணைக் கொடுத்து அவர்களைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளப் போவ தாகவும் நான் சொன்னேன். அப்படித்தான் செய்ய வேண்டு மென்று நீங்களும் ஆமோதித்தீர்களே. அந்தத் தீர்மானத்தைத் தானே இப்போது செய்கையில் நிறைவேற்ற நாம் உத்தேசிக் கிறோம். இதில் புதுமை ஒன்றுமே இல்லையே! இனி இந்த பங்களாவே உங்களுடைய ஜாகையாகப்போகிறது. இதிலிருக்கும் சகலமான சம்பத்தையும் சாமான்களையும் பிரியப்படி செலவு செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. எங்களுக்கு விருந்து செய்ய நீங்கள் ஆசைப்பட்டால், எந்த வஸ்துவை வேண்டு மானாலும் எடுத்து எப்படிப்பட்ட விருந்து வேண்டுமானாலும்