பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 131

கொண்டே போக, பூஞ்சோலையம்மாள், 'மாப்பிள்ளையின் பெயர் கண்ணபிரான் முதலியார். அவர் இப்போது இந்த ஊரில் தான் உத்தியோகத்தில் இருக்கிறார்” என்று மறுமொழி கூற, அது அவரது காதுக்குக் கேட்காமல் போக, அந்த அம்மாள் தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டு பிரமாதமாகக் கூச்சலிட்டு அதே விஷயத்தை இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்ல நேர்ந்தது.

அந்த விவரத்தை உணர்ந்த புரோகிதரது மனதில் ஒரு கவலை தோன்றியது. அந்தக் கலியாணம் உள்ளூரிலேயே நடக்குமோ அல்லது வெளியூரில் எங்கேயாவது நடக்குமோ என்ற சந்தேகம் உதித்தது. ஏனெனில், அது உள்ளூரில் நடந்தால் தமக்கு நூற்றுக் கணக்கில் ரூபாய், சோமன் சோடு, சாமான்கள் முதலிய வருமானங்கள் கிடைக்கும். வெளியூரில் மாப்பிள்ளை வீட்டில் நடந்தால் தமக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகையால் அந்த முக்கியமான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளாமல் அவரது பஞ்சாங்க முட்டையை அவிழ்க்க அவரது மனம் இடந்தரவில்லை. ஆகையால் அவர் பூஞ்சோலை யம்மாளை நோக்கி, "முகூர்த்தம் இந்த ஊரிலேதானே நடக்கப் போகிறது?’ என்று நயமாகக் கேட்க, பூஞ்சோலையம்மாள் ஆமென்று மறுமொழி கூறினாள்.

அந்த சந்தோஷகரமான செய்தியைக் கேட்ட புரோகிதர் மிகுந்த உற்சாகமும் குதூகலமும் அடைந்தவராய் உடனே தமது பஞ்சாங்க மூட்டையை அவிழ்த்து விரித்து, பெண்ணுக்கும், பிள்ளைக்கும் பொருத்தமிருக்கிறதா என்பதையும், அவர்கள் இருவருக்கும் தகுந்த முகூர்த்த நாள் எதுவென்றும் பார்த்து, நெடுநேரம் வரையில் விரல்களை விட்டுக் கணக்கு போட்டபின் சந்தோஷத்தினால் மலர்ந்த முகத்தோடு பூஞ்சோலையம்மாளை நோக்கி, "சரி பேஷ் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கு இருக்கும் பொருத்தத்தை என்னவென்று சொல்லுவேன்! ஆகா! இப்படிப்பட்ட அநுகூலமான தம்பதிகள் இந்த உலகத்திலேயே அமைந்திருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். என்ன பொருத்தம் போங்கள்! உயிரும் உடலும் எப்படிப் பொருந்தி இருக்கிறதோ அப்படியே இவர்கள் சந்தோஷமாக