பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 137

தொகையை நான் தங்களிடத்தில் வாங்கிவிட்டால், அதனால் நாங்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிட மாட்டோம். நாங்கள் அப்படிச்செய்தால் எங்களுடைய பெரிய மனுஷத்தனம் குறைந்து போகுமேயன்றி அதிகப்படாது. ஆகையால், தாங்கள் இந்த விஷயத்தைப் பற்றிய கவலையும், துன்பத்தையும் விலக்கி விடுங்கள். தங்களுடைய தமயனாரிடதில் இந்த விஷயத்தைத் தெரிவித்து, அவர் இதைக் குறித்து இனி எவ்வித வியாகுலமும் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். இந்த அபாயம் நேரிட்டதிலிருந்து எங்களுக்கு பெருத்த அநுகூலங்களெல்லாம் உண்டாயிருக்கின்றன. நல்ல மனிதர்கள் பெரிய மனிதர்களுடைய தரிசனமும் சிநேகமும் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மோட்டார் வண்டி குதிரையின் காலைக் கிழித்துவிட்டுப் போனவுடனே, குதிரை ஸாரட்டை இழுத்துக் கொண்டு பெருத்த பள்ளத்தின் சமீபமாகப் போனபோது இவர்களுடைய உயிர் எமலோகத்தின் வாசற்படியில் நின்று உட்புறத்தை எட்டிப் பார்த்துக் கொண்டி ருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு புண்ணியவான் தம்முடைய உயிரை ஒரு திரணமாக மதித்துப் பாய்ந்து குதிரைமேல் தாவி, அதை அப்புறப்படுத்தி, இந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். அவருடைய தாயார்தான் இதோ இருக்கும் அம்மாள். இந்த அம்மாளும், இவர்களுடைய குமாரரும் நல்ல தங்கமான மனிதர்கள், நற்குண நல்லொழுக்கம் உடையவர்கள். இவர்களுடைய சிநேகமும் அன்னியோன்னியமான பழக்கமும் எங்களுக்கு அன்றைய தினம் முதல் ஏற்பட்டு விட்டன. நாங்களும் இவர்களும். ஆயிரங்காலம் பழகினவர்கள்போல ஆகிவிட்டோம். இப்போது தங்களுடைய தரிசனமும் கிடைத்தி ருக்கிறது. ஏதோ பெருத்த உள் கருத்தோடுதான் ஈசுவரன் ஒவ்வொருவரையும் கூட்டி வைக்கிறான். தங்களைப் பார்க்க நேர்ந்தது நிரம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தாங்களும், தங்க ளுடைய தமயனாரும் மாத்திரம் மைலாப்பூரில் இருக்கிறீர்களா? தங்களுடைய தகப்பனார் தாயார் முதலிய தங்களுடைய குடும் பத்தார் எல்லோருமே மைலாப்பூரில் இருக்கிறீர்களா?” என்றாள். அந்த யெளவன மடந்தை, "நானும் என்னுடைய தமய னாரும் மாத்திரம் இந்த ஊருக்கு இப்போது வந்திருக்கிறோம்.