பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

செளந்தர கோகிலம்



மனதையும் தேகத்தையும் பரவசப்படுத்தியது. அந்த இடத்தைப் போன்ற அவ்வளவு அதி சிங்காரமான ஸ்தலத்தையும் ரமணியமான தடாகத்தையும் அவன் பிறந்த தினம் முதல் கண்டவனே இல்லை. ஆதலால் அவன் பிரமித்து ஸ்தம்பித்து மெய்மறந்து சிறிது நேரம் அப்படியே நின்று, அங்கே செறிந்து கிடந்த இயற்கை அலங்காரங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துத் தனது மனத்தையும் கண்களையும் களிக்கச் செய்தவனாய்ச் செடி கொடி கிளைகளினாலான மறைவுகளை யெல்லாம் கடந்துகொண்டே போக, புதுமை புதுமையாக எதிர்ப்பட்ட வஸ்துக்களைப் பார்க்கும்போதெல்லாம், அவனது மனதில் ஜில் ஜில்லென்று பிரம்மாநந்த சுகம் பரவியது. அப்படிப்பட்ட அதி ரமணியமான ஸ்தலத்திற்குத் தான் சொந்தக்காரனாகி, அந்த ஸ்தலத்தைக் காட்டிலும் கோடி மடங்கு அதிமனோகரமாக இருந்த கோகிலாம்பாளென்ற இன்பக் களஞ்சியமும் தானும் அந்த இடத்தில் தனியாக இருந்து குதுரகலமாகப் பேசி சரஸ் சல்லாபம் செய்யும் பாக்கியம் எப்போது கிடைக்குமோ என்று நினைத்துக் கொண்டவனாய், கண்ணபிரான் தனக்கு எதிரில் பந்தல்போல் அடர்ந்திருந்த ஒரு பன்னீர் மரத்தை நோக்க, அதன் கீழ் தொங்கிக் கொண்டிருந்த ஒர் ஊஞ்சல் பலகையில் அழகே மயமாக உட்கார்ந்திருந்த ஒரு மங்கை அவனது திருஷ்டிக்குப் புலப்பட்டாள். அது உயிருள்ள உண்மையான ஸ்திரீயோ அல்லது செயற்கையாகத் தங்கத்தினால் வார்த்து உயிருள்ளதுபோல அலங்கரித்து அழகிற்காக வைக்கப் பட்டிருக்கும் சிலையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. இரண் டொரு நிமிஷ நேரம் அவன் பிரமித்து ஸ்தம்பித்து மயங்கி நெக்கு நெக்குருகி அப்படியே நின்று அந்தப் பொற்பாவையை உற்று நோக்கினான். முழுதும் ஜரிகைளும் பச்சை நிறப் பட்டுமே நிறைந்த பெங்களூர்ப் புடவையை அந்தப் பெண்மணி அணிந்திருந்தமையால், செடி, கொடி கொத்துக்களின் பசுமை நிறமும், அவளது சேலையின் நிறமும் ஒன்றாக இழைந்து போயிருந்தன. கண்ணபிரான் கண்டது அவளது முதுகின் பக்க மாதலால், மூடப்படாமலிருந்த வலது கையில் சிவப்பு பனாரீஸ் பட்டு ரவிக்கை பள பளவென்று மின்னியதையும், விசாலமாகப் பின்னித் தொங்கவிடப்பட்டிருந்த கருங்கூந்தலின் பின்னலில்