பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 181

பவும் கொடுரமாகத் தண்டித்து அனுப்பி இருப்பான். அவள் கோகிலாம்பாளைப் போலவே இருந்ததைக் காண அவனது மனத்தில் ஒருவித இளக்கமும் கோழைத்தனமும் ஏற்பட்டு விட்டன.

மகா விவேகியான கோகிலாம்பாள் மறுமொழி கூறித் தனது தங்கையைக் கண்டிக்காமல் பேசாது இருக்கையில், தான் கண்டிப்பது ஒருகால் கெடுதலாக முடிந்து விடப் போகிறதே என்ற நினைவினால் அவன் கடைசி வரையில் பொறுமையோடு தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான். ஆனால், செளந்தரவல்லி யம்மாள் பலவாறாக துாஷித்துக் கடைசியாக மிகுந்த மூர்க் கத்தோடு போனதைக் காணவே, அவள் போய் எல்லோரி டத்திலும் தாறுமாறாகப் பிதற்றி, தனக்கும் கோகிலாம்பா ளுக்கும் தேக சம்பந்தம்கூட ஆகிவிட்டதென்று பிறர் நினைக் கும்படி பொய்யான சங்கதிகளை உளறி வைத்துவிடப் போகி றாளே என்றும், அதனால் தனக்கும் கோகிலாம்பாளுக்கும் இழிவும் பழிப்பும் அவமானமும் ஏற்பட்டு விடுமே என்றும் கண்ணபிரான் நினைத்து மிகுந்த அச்சமும், கவலையும் கொண்டான். தனது தங்கையிடத்தில் கோகிலாம்பாளுக்கு அவ்வளவு மதிப்புக் குறைவு ஏற்படுவதற்குத் தானே காரணமான வன் என்றும், நாகப்பாம்பின் விபத்திலிருந்து தப்புவிக்கும் பொருட்டு கோகிலாம்பாளைத் தான் துக்கியெடுத்துக் கொண்டு துரமான இடத்திற்குப் போனபிறகு, தான் மரியாதையாக துரத்தில் நின்று பேசி அவளுக்கு உபசரணை செய்து அவளை அனுப்பிவிட்டு, தானும் பிரிந்து போக வேண்டியது தனது கடமையாயிருக்க, அதை விட்டு அவளிடத்தில் மோக விகாரத் தைக் காட்டி, அவளோடு சரஸ்லீலைகள் புரிந்ததிலிருந்தே அவளுக்கு அப்படிப்பட்ட துன்பமும், அவமானமும், தலை குணிவும் ஏற்பட்டன என்றும் நினைத்து, மட்டுக்கடங்கா மனோ வேதனையும் இரக்கமும் மன இளக்கமும் கொண்ட கண்ண பிரான், அவ்வாறு கோபித்துக் கொண்டு போன செளந்தர வல்லியை கோகிலாம்பாள் நிறுத்திச் சமாதானப்படுத்தி அனுப்பு வாளென்ற நினைவினால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவள் வாயைத் திறந்து பேசாமல் மனது இடிந்து ஸ்தம்பித்து நிலை கலங்கி ஊமைபோல இருந்து விட்டதைக் காண, கண்ண