பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

செளந்தர கோகிலம்



கண்டு சந்தேகப்படாதபடி மரியாதையாக தூர இருந்து உபசாரம் செய்தால், மயக்கம் தெளியமாட்டேன் என்கிறதா? அதுதான் நல்ல சமயம் என்று இருவரும் ஆசையைத் தீர்த்துக் கொள்ளப் பார்த்தால், அதற்கும் மயக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் போய் நான் கண்டதையெல்லாம் அம்மா ளிடத்தில் சொல்லுகிறேன். அக்காளும் அவளுடைய நியாயத்தை அங்கேயே வந்து சொல்லிக் கொள்ளட்டும். நாம் ஏன் இங்கே பேச வேண்டும்? நீங்கள் இன்னமும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் போகிறேன்’ என்று குறும்பாகப் பேசி விட்டுத் தனது முகத்தை வேறே பக்கத்தில் திருப்பிக் கொண்ட படி முறுக்காவும், விசையாகவும் நடந்து அப்பால் போய் விட்டாள்.

கண்ணபிரான் எவ்வளவோ தந்திரமாகவும், நயமாகவும் செளந்தரவல்லியைத் துர்க்கிவைத்துப் பேசியிருந்தும், அவள் தனது மூர்க்க குணத்தை விடாமல் முறைப்பாகப் போனதைக் கண்ட கோகிலாம்பாள் உடனே நிமிர்ந்து கண்ணபிரானது முகத்தை நோக்க, அவன் அவளைப் பார்த்து, “கண்ணே நான் செய்த பதற்றமான ஒரு காரியத்தால் உனக்கு அப்படிபட்ட பெருத்த அவமானமும், மதிப்புக் குறைவும் ஏற்படும் என்பதை நான் கொஞ்சமும் எண்ணாமல் மோசம் போனேன். இப்போது நிகழ்ந்த சம்பவம் என் மனசை ஆயிரம் வாள் கொண்டு அறுப்பதுபோல இருக்கிறது. இந்த விஷயத்தில் உனக்கு என் மேல் நிரம்பவும் அருவருப்பும் கோபமும் ஏற்படும் என்பது நிச்சயம். இவள் போய் உன்னுடைய அம்மாளிடத்தில் ஏதாவது தாறுமாறாக உளறப் போகிறாளே என்று என் மனம் சஞ்சலப்படுகிறது” என்றான்.

உடனே கோகிலாம்பாள் அவனை நோக்கி இனிமையாகப் புன்னகை செய்து, 'இதைப்பற்றித் தாங்கள் ஏன் இவ்வளவு கவலை கொள்ளுகிறீர்கள்? நாம் என்ன பிரமாதமான தவறு செய்து விட்டோம்; ஒன்றுமில்லை. இவள் போய் இங்கே சொன்ன மாதிரி அம்மாளிடத்தில் சொல்ல ஆரம்பித்தால், அவர் கள் உடனே இவளுடைய வாயை அடக்கி, இவள் எதையும் சொல்ல விடாமல் செய்து விடுவார்கள். நான் கொஞ்சமும்