பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 237

நிறுத்தி, நான் வந்த காரணத்தை அந்தப் பெண்ணிடத்தில் சொன்னார்கள். அந்தப் பெண் உடனே என்னைப்பார்த்து இந்த முதலியாருடைய தாயாரும், தன்னுடைய தாயாரும் ஸ்மரணை தப்பிப் படுத்திருப்பதாகவும், முதலியார் சொல்லி அனுப்பிய செய்தி தன்னிடத்தில் சொல்லக்கூடியதானால், சொல்லலாம் என்றும், அந்த அம்மாள் விழித்துக்கொண்டு எழுந்த உடனே தான் அந்தச் செய்தியை அவர்களிடத்தில் சொல்வதாகவும் தெரிவித்தது. நான் உடனே சங்கதியை வெளியிட்டேன். முதலியார் இந்தப் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகவும், ஒரு வக்கீலை அமர்த்தித் தம்மை ஜாமீனில் விடுவித்துக்கொண்டு போகவேண்டிய விஷயமாய் அவரசமாக அம்மாளோடு பேசவேண்டும். ஆகையால், உடனே அவர்களை ஒரு வண்டியில் வைத்து அழைத்துவரச் சொன்னதாகவும் நான் சொன்னேன். உடனே அந்தப் பெண் நிரம்பவும் கலக்கமும் விசனம் அடைந்து என்னை அழைத்துக்கொண்டுபோய், அதனுடைய தாயாரும், இவருடைய தாயாரும் படுத்திருந்ததைக் காட்டியது. வேலைக் காரர்களும் பெண்ணும் சொன்னதுபோலவே அவர்கள் இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் படுத்திருக்கிறார்கள். அப்படியானால், நான் போகலாமா என்றேன். அந்தப்பெண் கொஞ்சநேரம் யோசனை செய்தது. அம்மாமார் இருவரும் எழுந்துவர முடியாமல் இருப்பதால், தானே நேரில் வந்து முதலி யாரோடு கலந்து பேசி தன்னுடைய சொந்தக்காரரையாவது வேலைக் காரரையாவது அனுப்பி வக்கீலை அழைத்துவரச் செய்து, மனு எழுதி வாதாடச் செய்யலாம் என்று தான் எண்ணு கிறதாகவும், தான் வரலாம் என்று முதலியார் தம் கைப்பட ஒரு கடிதம் எழுதி அனுப்பினால், தனக்குத் துணிவும் நம்பிக்கையும் ஏற்படும் என்றும், தான் உடனே புறப்பட்டு வந்து அவரைப் பார்ப்பதாகவும் அந்தப் பெண் சொல்லியது. அதைக் கேட்டுக் கொண்டு நான் உடனே வந்து விட்டேன். அவ்வளவுதான் சங்கதி’ என்றான்.

அவன் சொன்ன வரலாற்றைக் கேட்கவே, கண்ணபிரானது மனம் கொதித்தது தேகம் பதறியது. தனக்கு அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட பெருத்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் தனது தாயாரும் மாமியாரும் மகா பரிதாபகரமான