பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

செளந்தர கோகிலம்



செய்தானா இல்லையா என்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை என்றும் சொன்னார்கள்.

'அதைக்கேட்ட போலீசார் அந்த வீட்டைப் பற்றிய விசாரணையை அவ்வளவோடு நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு அப்பால் இருந்த விலாசதார்களிடம் போய், அவர்கள் தத்தம் உருப்படிகளை வாங்கிக் கொண்டார்களா என்பதை விசாரிக்க, அவர்கள் எல்லோரும், தபாற்காரன் தங்களுடைய ஜாகைக்கு வரவில்லை என்றும்; தபாற்காரனையே தாங்கள் இன்றைய தினம் பார்க்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள், ஆகவே, முதலில் விசாரிக்கப்பட்ட ஐந்து விலாசதார்களுக்கு மாத்திரமே உருப்படிகள் பட்டுவாடா செய்யப்பட்டிருந்தன என்றும், அதற்குமேல் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். ஆகையால், ஐந்தாவது விலாசத்துக்குச் சம்பந்தப்பட்ட வீட்டுக்கும் ஆறாவது விலாகத் துக்குச் சம்பந்தப்பட்ட வீட்டுக்கும் இடையில் தபாற்காரன் ஒருகால் பணத்தொகையோடு ஒடிப்போயிருக்க வேண்டும், அல்லது, அவனுக்கு ஏதாவது விபத்து நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று. அந்த இடத்தில் ஏதாவது சந்து, அல்லது தெரு குறுக்காகப் போகிறதா என்பதைப் போலீசார் கவனித் தனர். எதுவும் போகவில்லை. தபாற்சேவகன் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடிப்போக நினைத்திருந்தால், ஐந்து விலாசம் வரையில் வந்து பட்டுவாடாச் செய்த பின் திரும்பிப் போகா மல், ஆரம்பத்திலேயே போயிருப்பது சுலபமானது ஆகையால், அவனே ஒடியிருக்க மாட்டான் என்றும், பிறராலேதான் அவ னுக்கு அபாயம் நேர்ந்திருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு ஒருவகையான சந்தேகம் உண்டாயிற்று; ஆகையால், அவர்கள் ஐந்தாவது விலாசதாரிடம் மறுபடி ஒருமுறை போய் அவனிடத்திற் பற்பல கேள்விகளை நன்றாகக் கேட்டு, அவனிடத்திலிருந்த மணியார்டர் கூபனை வாங்கிப் பார்த்தனர். அவ்விடத்தை விட்டபின் தபாற்காரன் அடுத்த வீட்டுக்குள் போனான் என்பதையும், அந்த விலாசதாரிடத்தில் போலீசார் அறிந்து கொண்டனர். ஆகவே, அடுத்த வீடாகிய ஆறாவது விலாசதாரைக் கண்டு விசாரித்தே தீர வேண்டுமென்று உறுதி செய்து கொண்ட போலீசாரும் மற்றவர்களும் அந்த வீட்டிற்குப்