பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 - வது அதிகாரம் விதைக் கோட்டைக்குள் எலி

விசார் கண்ணபிரானைக் கைதிசெய்து பங்களாவை தி போல் விட்டு அழைத்துக்கொண்டு போனபிறகு நிச்சய % ;தார்த்தத்தின் பொருட்டு ஆயிரக்கணக்கில் வந்து ఫీడ్లి கூடியிருந்த விருந்தினரும், ஆறவினரும், பணிமக்க

s ளும், ஏனையோரும் கரைகடந்த திகிலும் அளவிறந்த திகைப்பும், மட்டுக்கடங்காத் துயரமும், அபாரமான ஏக்கமும் கொண்டவர்களாய் ஒருவரோடு ஒருவர் பேசாமல் சித்திரப் பதுமைகள்போல அசைவற்று, நிசப்தமாகவும் வியப்பே வடிவாகவும் மாறிப்போயினர். அத்தகைய பெருத்த தனிகரது மாளிகையில் குதூகலமாக நடத்தப்படும் அந்தக் கலியாணச் சடங்கின் இடையில் அப்படிப்பட்ட புதுமையிலும் புதுமையான சம்பவம் நிகழுமோ என்ற சந்தேகமும், அது பொய்யோ மெய்யோ என்ற ஐயமும் கொண்டவர்களாய், வாய் திறந்து பேசவும் மாட்டாத அதி ஆச்சரியமான நிலைமையில் எல்லோரும் இருந்தனர். கண்ணபிரான் பரம ஏழை என்பது தெரிந்திருந் தாலும், அவனது நிகரற்ற பேரழகையும், அதிரமணியமான குணாதிசயங்களையும் அடக்க ஒடுக்கத்தையும், புத்தி தீட்சண்யத்தையும் கண்டு அப்படிப்பட்ட மகாசிலாக்கியமான மாப்பிள்ளை பூஞ்சோலையம்மாளுக்கு வந்து வாய்த்தது பூர்வஜென்ம பூஜாபலன் என்று மதித்து மட்டுக்கடங்கா மகிழ்ச்சி கொண்டிருந்த அத்தனை ஜனங்களும் தத்தமக்கு நிரம்பவும் அருமையான ஒரு மனிதனைப் போலீசார் அநியாயமாக அந்த நிலைமையில் அவ்வாறு அவமானப் படுத்திக்கொண்டு போனால், எவ்வளவு அதிகம்ாக வருந்துவார்களோ, அதற்குமேல் பன்மடங்கு அதிகமாக மனம் நைந்து கலக்கமுற்றுக் கண்ணிர் சொரிந்தனர்; மகா உத்தம புருஷனான கண்ணபிரான் அந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்கமாட்டான் என்றும், போலீசார் ஏதோ பகையை வைத்துக்கொண்டு அந்தக் குற்றத்தை