பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

செளந்தர கோகிலம்



'சரி வாருங்கள் பக்கத்து அறைக்குப் போவோம், குழந்தை கொஞ்சம் தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டு பக்கத்தில் இருந்த இன்னொரு பெரிய மண்டபத்திற்குச் செல்லலாயினர்.

மற்ற எல்லோரும் அந்த அந்தப்புரத்தைவிட்டு வெளியில் போனவுடனே புஷ்பாவதி பூஞ்சோலையம்மாளை நோக்கிப் புன்னகை செய்து, 'நானும் போய்ப் பக்கத்து மண்டபத்தில் இருக்கட்டுமா? நீங்கள் மாத்திரம் இருக்கிறீர்களா? குழந்தை திடீ ரென்று ஏதாவது வேண்டும் என்று கேட்டால், நீங்கள் குழந்தை யைத் தனியாக விட்டுப்போக நேருமே. நான் வெளியில்போய் என்ன செய்யப்போகிறேன்? தங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால், நானும் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், அவளை அனுப்புவது மரியாதைக் குறைவென நினைத்து, 'குழந்தை போகும்படிச் சொன்னது, கும்பலாக இருந்த மற்றவர்களையே அன்றி உங்க ளையல்ல. நீங்கள் இருப்பதற்குத் தடையென்ன? நீங்கள்தான் நம்முடைய வீட்டு மனிதர் ஆகிவிட்டீர்களே!” என்று மகிழ்ச்சி யோடு நயமாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதி மிகுந்த களிப்படைந்தவள் போலக்காட்டிக்கொண்டு, அந்த அந்தப்புரத்தின் வாசற்கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக்கொண்டு கட்டிலண்டை வந்து, தான் முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண் டாள். புஷ்பாவதியும் அங்கே இருப்பதைப்பற்றி பூஞ்சோலை யம்மாள் மகிழ்ச்சி கொண்டவள் போலப் பேசினாள். ஆனா லும், தனது இளைய குமாரியான செளந்தரவல்லியைக் கலி யாணம் செய்துகொள்ளப்போகும் சம்பந்தியின் வீட்டு முக்கிய மனுஷியான புஷ்பாவதிக்கு எதிரில் தங்களுக்கு அப்படிப்பட்ட அவமானமும் இழிவும் நேர்ந்து விட்டனவே என்ற எண்ணத் தினால், மிகுந்த லஜ்ஜையடைந்து அவளைப் பார்க்கவும் கூச்ச முற்றுக் குன்றிப்போயிருந்தாள். ஆனாலும், அந்த அம்மாள் வெளி யில் காட்டிக்கொள்ளாமல், அவளிடத்தில் மிகுந்த அன்னி யோன்னியம் பாராட்டி மொழிந்தாள்.

அப்போது தனது சுய உணர்வோடு கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த கோகிலாம்பாளது மனநிலைமையும்