பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

செளந்தர கோகிலம்



முதலியார் என்று குறிக்கப்பட்டிருந்த அந்த வேறுபாடு மிகவும் சந்தேகாஸ்பதமாக இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் செட்டியாரை நோக்கி அந்தக் கோபால கிருஷ்ணப் பிள்ளையின் அங்க அடையாளங்களை எல்லாம் கேட்டறிந்துகொண்டபின், முதல் நாள் வந்து ஒரு மனிதர் அந்த வீட்டைத் திறந்ததாகச் சொன்ன அண்டை வீட்டாரை அழைத்து அந்த மனிதருடைய அங்க அடையாளங்களைக் கேட்க, அவர்கள் சொன்னதும் செட்டியார் சொன்னதும் ஒரே மனிதனுடைய அடையாளங் களாகவே இருந்தன. அவ்வாறு அவர்கள் விசாரணை செய்து கொண்டிருக்கையில் நம்பெருமாள் செட்டியார் கதவின் பூட்டை விலக்கிக் கதவைத் திறந்தார். உடனே ஒரு ஜெவான் உள்ளே நுழைந்து பார்க்கப் போனான்; அதற்குள் இன்ஸ்பெக்டர் தந்தியாபீசுக்கு ஒரு ஜெவானை அனுப்பி அந்த மூன்று தினங்களுக்குள் கோபாலகிருஷ்ணப்பிள்ளை என்பவருக்கா கிலும், கந்தசாமி முதலியார் என்பவருக்காகிலும் ஏதாவது தந்தி வந்திருக்கிறதா வென்று பார்த்துவிட்டு வரும்படிச் சொல்ல, அவ்வாறே அவன் போய்விட்டுத் திரும்பிவந்து, அப்படிப்பட்ட தந்தியே வரவில்லையென்று சொன்னான். அதைக் கேட்ட போலீசாரும் தபால் இலாகாதார்களும் மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்து தபால்காரன் எப்படித்தான் போயிருப் பான் என்று சிந்தித்தவர்களாக இருந்தனர். அந்தச் சமயத்தில், வீட்டின் இரண்டாவது கட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ஜெவான் பெருத்த கூச்சலிட்டு, 'ஐயா ஐயா! வாருங்கள் வாருங்கள் தபாற்காரன் இதோ கிடக்கிறான்” என்று கூவியழைக்க, அதைக்கேட்ட யாவரும் விவரிக்கவொண்ணாத திகிலும், நடுக்கமும், கலக்கமும் அடைந்து உள்ளே ஓடினார்கள். முதல் கட்டு முழுதும் காலியாக இருந்தது. இரண்டாவது கட்டில் அவர்கள் நுழைந்தவுடனே நிரம்பவும் பயங்கரமான ஒரு காட்சி எதிரில் தென்பட்டது; காணாமற் போன தபாற்காரன் அலங்கோலமாகக் கீழே விழுந்து கிடந்தான். அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. வாயில் ஒரு துணிப் பந்து சொருகப் பட்டிருந்தது. அவனுடைய கண்களிரண்டும் மூடப்பட்டிருந்தன. அவன் பேச்சு மூச்சு அசைவு முதலிய உயிர்ச் சின்னங்களின்றிப் பிணம் போலக் கிடந்தான். அவனுடைய