பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 287

இதைப்பற்றி எப்படியாவது எண்ணிக் கொள்ளட்டும்; அவர்கள் கலியாணத்துக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. நீ சொல்லுகிறபடி உண்மையை எடுத்து அவர்களுக்கு எல்லாம் நாங்கள் சொல்லிப் பார்க்கிறோம். அவர்கள் அதை நம்பி வந்தால் வரட்டும்; இல்லாவிட்டால், இருக்கட்டும். நாம் நம்முடைய கலியாணத்தை நடத்திவிடுவோம். ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது; இந்த வழக்கின் விசாரணை எல்லாம் திர எவ்வளவு காலம் பிடிக்குமோ? தெய்வச் செயலாக, அவருக்கு இரண்டாரு வருஷம் தண்டனை ஏற்படுமானால் அவர் திரும்பி வந்த பிறகு உன்னுடைய கலியாணம் நடக்கப்போகிறது. அது வரையில் உன்னுடைய தங்கையின் கலியாணத்தையும் ஒத்தி வைக்க நேருமல்லவா?” என்றாள். அதைக்கேட்ட கோகிலாம் பாள் புஷ்பாவதி தங்களிடத்தில் வைத்திருந்த அந்தரங்கமான பிரியத்தையும் பரிவையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந் தவளாய், புன்னகையோடு அவளை நோக்கி, "அம்மா! நீங்கள் எங்களிடத்தில் வைத்திருக்கும் உண்மையான மதிப்பையும் அன்பையும் காண, எனக்கு நிரம்பவும் சந்தோஷம் உண்டா கிறது. ஏதோ இப்படிப்பட்ட ஆபத்துக் காலத்தில், தெய்வச் செய லாகத்தான் உங்களைப்போன்ற சிரேஷ்டமான மனிதர்களுடைய சிநேகம் எங்களுக்கு ஏற்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்னம் இரண்டொரு மாசகாலத்தில் முடிந்து போகலாம். உடனே அவர்கள் விடுதலையடைந்து வந்துவிடலாம். வந்த உடனே கலியாணத்தை நடத்திவிடுவோம். என்னுடைய கலியா ணத்தோடு சேர்த்து, என் தங்கையின் கலியாணத்தை வைத்துக் கொண்டாலும் கொள்ளுங்கள் வெவ்வேறாக நடத்திக் கொண்டாலும் கொள்ளலாம். அது உங்களுடைய பிரியத்தைப் பொருத்த விஷயம். நீங்கள் சொல்லுகிறபடி அவர்களுக்கு இரண்டொரு வருஷகாலத்துக்கு தண்டனை கிடைத்துவிடுமா னால், அந்தக்காலம் முடிகிறவரையில் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவளுடைய கலியாணத்தை முன்னாகவே நடத்திவிடுவோம். அதைப்பற்றி நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு எழுதியுள்ளபடி

செய்து விடுவோம்” என்றாள்.