பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 19

தங்களுக்குள் மெதுவான குரலில் அவனைப்பற்றி ஏதோ வார்த்தைகள் பேசிக்கொண்டதை அவன் உணரவில்லை.

ஸாரட்டிலிருந்த இருவருள் மேகவர்ணப் பட்டாடை அணிந்திருந்தவள் மற்றவளைப் பார்த்து, "அடீ கோகிலா அதோ குறட்டின்மேல் போகிறாரே அவர் யாரென்பது உனக்குத் தெரிகிறதா? நம்முடைய பங்களாவுக்குப் பக்கத்தில் இருக்கும் மாடிவிட்டில் கற்பகவல்லியம்மாளென்று ஒரு பெரிய அம்மாள் குடிவந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம் அல்லவா. அந்த அம்மாளுடைய பிள்ளை இவர்தான் போலிருக்கிறது. இவருக்கு இங்கே ஏதோ ஒர் ஆபிசில் உத்தியோகம் என்று சொன்னார்கள் அல்லவா. நம்முடைய பங்களாவின் உப்பரிகையில் நான் இருக்கையில் இவர் ஒரு நாளைப் போல காலை பத்துமணி சமயத்தில் வீட்டை விட்டுப் போவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இவர்கள் வந்து மூன்று மாசகாலமாகிறது. தங்கள் பாடுண்டு தாமுண்டு, ஒருவருடைய ஜோலிக்குப் போகிற தில்லை; நம்முடைய வேலைக்காரி மூர்த்தியம்மாள் கூட இவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். இவர்கள் தாயும் பிள்ளையும் மகா நல்ல குணமுடையவர்களாம். இவர்களும் நம்முடைய ஜாதியைச் சேர்ந்தவர்களாம். இவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பார்த்தாயா?” என்றாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள் என்னும் மடக்கொடி மற்றவளை நோக்கி மிருதுவான குரலில் பேசத்தொடங்கி, உஷ்! செளந்தரா! ஓங்கிப் பேசாதே! வண்டிக்காரனுடைய காதில் விழப்போகிறது; நீ என்ன வர வர இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாய் வழியில் போகிற மனிதர்களை யெல்லாம், நம்மைப் போல இருக்கிற கன்னிகா ஸ்திரீகள் ஏறிட்டுப் பார்ப்பதே முதலில் தப்பான காரியம். ஏதோ தவறிப் பார்த்தாலும், அவருடைய அழகு முதலியவற்றைப்பற்றி இப்படி வர்ணிக்கத் தொடங்குவது கொஞ்சமும் தகாது, அழகாக இருப்பவரைக் கண்டு விருப்பும், அழகில்லாத ஜனங்களைக் கண்டு வெறுப்பும் கொள்வது கேவலம் அஞ்ஞானமே அன்றி வேறல்ல. மனிதர் பார்வைக்கு எப்படியிருந்தாலும், அவர்கள் எல்லோரும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சமயோக்கியதையுள்ள ஜீவன்க ளென்று நினைத்து, எல்லோரிடத்திலேயும் நாம் சமமான அன்பையும் தயையும் வைக்கவேண்டும்; அதன்பிறகு அவரவர்