பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 24

அற்புத வனப்பை அள்ளி அள்ளிப் பருகிய வண்ணம் பின்னால் வந்துகொண்டிருந்தான்.

அவ்வாறு ஸாரட்டு முன்னாலும், அவன் பின்னாலுமாக வடக்குத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் வடக்குத் திக்கிலிருந்து அவர்களுக்கு எதிராக ஒரு மோட்டார் வண்டி மிகுந்த விசையோடு தலைகால் தெரியாமல் ஓடி வந்துகொண்டிருந்தது. அது வந்த விசையில் அதற்குள்ளிருந்தது யார் என்பதைக் கூட அறிந்து கொள்ளக்கூடாமல், கண்பொறி கலங்கக் கூடியதாக இருந்தது. அப்படி வந்த மோட்டார் வண்டி, நமது மடமயிலார் இருவரையும் தாங்கிச் சென்ற ஸ்ாரட்டிற்கு நேர் எதிரில் வந்ததாகத் தோன்றியது. அதைக்கண்ட சாரதி மினியன் நிரம்பவும் பயந்து தனது வண்டியைக் குறட்டின் ஒரமாக வளைத்து மெதுவாக ஒட்டிக் கொண்டு செல்லத் தொடங்கினான். ஆனால், மோட்டார் வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவர் அதன் யந்திரத்தை அபரிமிதமான விசையோடு முடுக்கி விட்டபின், அன்றையதினம் நடந்த தபாற்கொள்ளை விஷயத்தில் தமது முழு நினைவையும் செலுத்தி மெய்ம்மறந்து வந்தார் ஆகையால், தமக்கெதிரில் ஒரு ஸாரட்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் கவனிக்கா மலே வந்து விட்டார்; அந்தச் சமயத்தில் மினியன் தனது ஸ்ாரட்டைக் கிழக்குப்பக்கமாக வளைத்துக்கொண்டு போகாமல் இருந்தால், மோட்டார் வண்டி நேராக வந்து ஸாரட்டில் மோதிக் குதிரையையும், வண்டியையும், அதற்குள் இருந்த பெண்மணிகள் இருவரையும் தவிடுபொடியாக்கிக் காற்றில் துாற்றி இருக்கும்; அப்படிப்பட்ட மகா பயங்கரமான அவகேடு மாத்திரம் தெய்வத்தின் அருளால் விலக்கப்பட்டது. ஆனாலும், அவர்களுக்கு வேறுவிதத்தில் ஒரு பெருத்த அபாயம் நேரிட்டது; ஸாரட்டின் பக்கத்தில் மிகவும் நெருங்கி ஓடிய மோட்டார் வண்டியின் சக்கரம் குதிரையின் காலை இரண்டங்குல ஆழம் கிழித்துக் கொண்டு சென்றதோடு, ஸாரட்டின் மேற்குப் பக்கத்துச் சக்கரங்களை முறித்துக்கொண்டு சென்றது. ஆகையால் ஸ்ாரட்டு மேலண்டைப் பக்கமாய்ச் சாய்ந்து கீழே விழுந்து விட்டது. அந்தச் சமயத்தில் குதிரை தனது காலின் கிழிப்பைப் பொறுக்க மாட்டாமல் வீரிட்டுத் துள்ளிக் குதித்துக்கொண்டு, கட்டிலடங்காமல் மிகுந்த வீராவேசத்தோடு ஸாரட்டை