பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

செளந்தர கோகிலம்



கட்டிலடங்காமல் பதறியவண்ணம் மோட்டார் வண்டியிலே இருந்தது.

அவ்வாறு அரைநாழிகை நேரம் சென்றது. அதுவரையில் அவரது மனம் அவரது வசப்படாமல் குழம்பிக் கரைகடந்த சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. அதற்குள் அங்கே இருந்த ஜனங்கள் எல்லோரும் அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டனர். வண்டிக்கார மினியனும், கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாருமே மிகுதியாக நின்றனர். நாழிகை ஏற ஏற, அவரது மனதில் அங்கே நடந்த சம்பவத்தின் விஷயங்கள் யாவும் நாடகக் காட்சிகள் போல மறுபடியும் புலப்பட ஆரம்பித்தன. தேஜோமயமாக இருந்த அந்த ரதிதேவிகளின் சுவர்ண பிம்பம் போன்ற அழகிய வடிவங் கள் எதிரிலேயே நின்று தாண்டவமாடிக் கொண்டிருந்தன. அவர் இயற்கையிலேயே சிற்றின்ப விருப்பம் உடையவர் ஆகையால், அதுகாறும் அவர் பார்த்தே அறியாத அவ்வளவு விசேஷ வனப்பும் விவேகமும் ஜ்வலிக்கப் பெற்றவராக இருந்த இந்த இளநங்கையரைக் கண்ட ஒரே நிமிஷத்தில், அவர் அவர்கள்மீது அபாரமான மையல் கொண்டு தத்தளிக்கலானார். அந்த இரண்டு மெல்லியலாருள் செளந்தரவல்லி கபடமற்ற நற்குணமுடையவ ளாகவும், கோகிலாம்பாள் மாசற்ற நன்னடத்தையும், சிறந்த யூகமும், வியவகார ஞானமும் உடையவளாகவும் இருந்ததை எண்ண எண்ண, அவரது மனம் நெகிழ்ந்து பாகாய் உருகியது. அவர்களுள் எவள் சிறந்தவள், எவள் உயர்ந்தவள், எவள்மீது தனது மனம் அதிகமாகச் சென்றது என்பதை உணரமாட்டா தவராய், அவர்கள் இருவரின் மீதும் அவர் கடுமோகம் கொண்டு விட்டார். ஆனால் கேவலம் ஏழை போலிருந்த யாரோ ஒரு மனிதனது உதவியை அவர்கள் ஏற்று அவனை வண்டியில் வைத்துக் கொண்டு போனதும், தமது உதவியை மறுத்துத் தம்மைப் பொருட்படுத்தாமல் சென்றதும், அவரை அளவிறந்த சஞ்சலத்தில் ஆழ்த்தியதன்றி, அவரது மனதில் ஒருவிதமான ஆத்திரத்தையும் பதைப்பையும் அவமானத்தையும் உண்டு பண்ணின. அவர்களது வண்டிக்குப் பின்னால் தாமும் தமது மோட்டார் வண்டியை விட்டுக் கொண்டுபோய், அவர்களது ஜாகை இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரலாமா என்ற நினைவு அவரது மனதில் தோன்றியது. ஆனாலும், அவ்வாறு தாம் செல்வது அந்தப் பெண் பாவையருக்குத் தெரிந்தால்