பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

செளந்தர கோகிலம்



வாங்கச் சரிப்படவில்லையோ? சிமினியைக் காணோமே?”

என்று நயமாக வினவினாள்.

கண்ணபிரான் என்ற அழகிய பெயர் கொண்ட நமது யெளவன குமாஸ்தா தனது தாயின் மனம் சஞ்சலப்படவும், அவளது முகம் கோணவும் பார்த்து என்றைக்கும் சகித்திராதவன் ஆனாலும், அன்றைய தினம் அவன் கோகிலாம்பாள் என்னும் பெண் தெய்வத்திற்கு அடிமையாகித் தனது நினைவையெல்லாம் அடுத்த பங்களாவிற்குள் நுழைய விட்டிருந்தவன் ஆதலால் தான் அன்றைய தினம் கால தாமதமாக வீட்டிற்கு வந்ததைப் பற்றித் தனது தாய் சஞ்சலமுற்று வருந்துகிறாள் என்பதையும், தான் அவளுக்குச் சமாதானம் சொல்ல வேண்டிய கடமை பாக்கி இருக்கிறது என்பதையும், அவன் அப்போதே உணர்ந்து கொண் டான் தான் கோகிலாம்பாளைக் கண்ட முதல் தனது மனம் பைத்தியம் கொண்டது போல இருக்கிற சங்கதியை வெளியி டாமல் மறைத்து கடற்கரையில் நிகழ்ந்த விபத்தின் விவரத்தை மாத்திரம் தான் தனது தாயினிடத்தில் வெளியிட வேண்டு மென்ற எண்ணம் கொண்ட கண்ணபிரான், 'அம்மா என்ன வென்று சொல்லுவேன்! இன்றைக்கு சாயங்காலம் கடற்கரையில் ஒரு பெரிய அபாயம் நேரிட்டது! நல்ல வேளையாக உயிர்ச்சேதம் இல்லாமல் போய்விட்டது!’ என்றான்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் திடுக்கிட்டுப் பதறிப் போய், 'ஆ என்ன? அபாயமா? யாருக்கு உனக்கா என்ன அபாயம்? சீக்கிரமாகச் சொல். என் உடம்பு பதறுகிறது” என்று மிகுந்த திகிலோடும் வியப்போடும் கேட்க, உடனே கண்ண பிரான் சந்தோஷத்தினால் புன்னகை செய்தவனாய், “எனக்கு ஒன்றுமில்லை. நம்முடைய வீட்டுப் பக்கத்து பங்களாவிலே இருக்கும் துபாஷ் முதலியாருடைய பெண்கள் இரண்டுபேரும் ஸாரட்டில் ஏறிக் கொண்டு கடற்கரைச் சாலை வழியாக வந்து கொண்டே இருந்தார்கள். எதிர்ப்பக்கத்திலிருந்து வந்த ஒரு மோட்டார் வண்டி மோதி, ஸாரட்டைக் கவிழ்த்து விட்டது. குதிரையின் காலையும் அந்த மோட்டார் வண்டி கிழித்து விட்டது. ஆகையால், குதிரை வீரிட்டுக் கதறி, கவிழ்ந்துபோன ஸாரட்டை இழுத்துக் கொண்டே ஓடுகிறது. வண்டிக்குள்