பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

செளந்தர கோகிலம்



அந்த வரலாற்றைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் கரை கடந்த வியப்பும் திகைப்புமடைந்து, 'என்னவோ நல்ல காலந்தான் ஒருத்தருக்கும் உயிர்ச்சேதம் இல்லாமல் போயிற்று. இந்த ஊர் கெட்டகேடு அப்படியிருக்கிறது. இந்த இழிவு மோட்டார் வண்டி எப்போதுதான் ஒழியுமோ தெரிய வில்லையே! வழியில் மோட்டார் வண்டியினால் உனக்கு ஏதாவது அபாயம் நேர்ந்து விட்டதோ என்ற கவலையினாலே தான், நான் உள்ளே இருக்கமாட்டாமல் வேதனைப்பட்டுக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டி ருந்தேன். நீ இந்த வழியாகத்தானே மேற்கே போயிருக்கிறாய். கொஞ்ச நேரத்துக்கு முன் உள்ளே பூனை சாமான்களை உருட்டியது. அதற்காக உள்ளே வந்து பார்த்து விட்டு, திரும்பி வாசலுக்கு வந்தேன். அப்போதுதான் நீ மேற்கே போயிருக்க வேண்டும். எப்படியாவது நீ செளக்கியமாக வீடு வந்து சேர்ந்தாயே; அதுவே போதுமானது. அந்தக் குதிரை உனக்கு அடங்காமல் முரட்டுத்தனமாக உன்னையும் சேர்த்து இழுத் திருந்தால், அவர்களோடு கூட நீயும் போய்ச் சேர்ந்திருப்பாய். இந்தப் பாழும் பட்டணத்தைவிட்டு வேறே எந்த ஊருக்காவது நாம் போய்விட்டால், இப்படிப்பட்ட அபாயமெல்லாம் இல் லாமல் போகும். அதிருக்கட்டும் அவர்கள் ஏதோ அபாயத்தில் இருக்கிறார்கள் என்று நீ உன்னுடைய உயிரையும் மதிக்காமல் போய் விழுந்து காப்பாற்றி விட்டது சரியான காரியந்தான். அதன் பிறகு திருவல்லிக்கேணிக்குப் போய் வண்டி கொண்டுவரு வதற்கு வேறே மனிதரில்லாமல் அவர்கள் தவித்திருந்ததைக் கண்டு, நீ போய் வண்டி கொண்டு வந்ததும் பரோபகாரமான காரியந்தான். நீ அவ்வளவோடு வந்து விடாமல், அந்தப் பெண்க ளோடு வண்டியில் ஏறிக்கொண்டு வந்ததுதான் என் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீ செய்த உதவிக்குப் பதிலுதவியாக அவர்கள் உன்னை வண்டியில் உட்காரவைத்துக் கொண்டு வந்தது போலவும், இதுவரையில் வண்டியிலேயே ஏறாதவன் போல அற்ப சந்தோஷியாக நீ அதில் ஏறி வந்தது போலவும் பிறர் எண்ணிக் கொள்ள மாட்டார்களா? நாம் ஏழைகளாக இருந்தாலும், நம்முடைய கண்ணியத்தையும் கெளரவத்தையும்