உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 227

நாழிகையாயிற்று. ஒரு வேலைக்காரன் தடதடவென்று அங்கே ஒடி வந்தான். அவனைக் கண்ட மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் அவன் எவ்விதமான செய்தி கொண்டு வந்திருக் கிறானோ என்ற ஆவலும் மனவெழுச்சியும் கொண்டு அவனது முகத்தை உற்றுப் பார்த்தனர். உடனே செளந்தரவல்லி அவனை நோக்கி, ‘என்னடா யார் வந்திருக்கிறது? அக்காளா?’ என்று ஆவலோடு வினவினாள். அப்பொழுது சுய உணர்வோடு இருந்த பூஞ்சோலையம்மாளும் திடுக்கிட்டு, சகிக்க வொண்ணாத ஆவலும் துடிப்பும் அடைந்து ஒருக்கால் கோகிலாம்பாள்தான் வந்திருப்பாளோ என்ற நினைவைக் கொண்டு தனது கண்களைத் திறந்து பார்த்தாள். வெளியிலிருந்து ஓடிவந்த வேலைக்காரன் செளந்தர வல்லியை நோக்கி, ‘அம்மா! வாசலில் ஐந்தாறு வண்டிகள் வந்திருக்கின்றன. நம்மைச் சேர்ந்த ஜனங்கள் சுமார் இருபது முப்பது பேர் வந்திருக்கிறார்கள்’ என்றான்.

அவன் கூறிய சொற்கள் பூஞ்சோலையம்மாளது செவியிலும் நன்றாகப் பட்டன. ஆதலால், அந்த அம்மா திடுக்கிட்டுத் தனது கண்களை விழித்துக்கொண்டு அந்த வேலைக்காரனைப் பார்த்து, “ஏனப்பா, அவர்களோடு நம்முடைய மூத்த குழந்தையும் வந்திருக் கிறதாவென்று பார்த்தாயா?’ என்று மிகுந்த ஆவலோடு வினவினாள்.

வேலைக்காரன், “வரவில்லையம்மா! நானும் அதைத்தான் முக்கியமாகக் கவனித்தேன். ஒவ்வொரு வண்டியிலிருந்தும் இறங்கிய எல்லா மனிதரையும் நான் உற்றுப் பார்த்தேன். நம்முடைய பெரிய குழந்தை காணப்படவில்லை’ என்றான்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் ஒருவாறு திகைத்துப் போய், “அப்படியானால், இவர்கள் எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லையே! இவர்களுக்கு இந்த விஷயத்தை யாராவது தெரிவித்திருப்பார்களோ என்னவோ தெரியவில்லை! நான் அலுத்துப் போய் இருக்கும் அசந்தர்ப்ப வேளையில் இவர்கள் எல்லோரும் வந்து தொண தொண வென்று கேள்விகள் கேட்பார்களே! நான் எப்படி இவர்களைத் திருப்தி செய்யப் போகிறேன்” என்றாள்.