பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
21

கிறோமே யன்றி, பின்னணிக்குச் சென்றோமில்லையென்பதை எடுத்துக் காட்டுவதற்குத் தான். (கரகோஷம்)

வர்க்கப் போராட்டத்தில் ஜாதி ஒழிப்பு
விவசாயக் கூலிக்காகவும் ஏழை விவசாயிக்காகவும், குன்னியூர் அய்யரையும், திருவாடுதுறை மடத்தையும், வானமாமலை ஜுயரையும், வலிவலம் தேசிகரையும், பி. டி. ராஜனையும் இத்தகைய நிலப்

பிரபுக்கள் பலரையும் எதிர்த்துப் போராடிய போராட்டங்கள் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் அல்லவா என்று உங்களை நான் பணிவன்புடன் கேட்கிறேன்.

சிமிண்டு ஆலயில் சங்கரலிங்க அய்யரையும், மோட்டார்

தொழிற்சாலை டி. வி. எஸ். அய்யங்காரையும் ஜி. டி. நாடுவையும் இன்னபிற பண-ஜாதி அதிபதிகளையும் தொழிலாளர் போராட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்த்துப் போராடுவது, ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்கு அரண் கட்டுவதாகாதா என்று உங்களை வினயமாகக் கேட்கிறேன்.

"இந்த நிலப்பிரபு எதிர்ப்பு முதலாளி எதிர்ப்பு போராட்டங்களின்

வழியாக, ஜாதி பேதம் பாராட்டாது சகல மக்களையும் திரட்டுவது ஜாதி ஒழிப்புக்கு இணைந்த செயல் அல்லவா என்று கேட்கிறேன்" என்று கேட்டார்.

"தோழர்களே! மேற்கூறியபடி சொல்லும் செயலும் உள்ள

நாங்கள், ஜாதி ஒழிப்பு என்ற பேரால் பெரியார் நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம். ஏன்?

ஜாதீய முறையின், வெளியீடுகளை அறவே துடைக்கவேண்டுமானால், ஜாதி நடைமுறையில் சமுதாயக் கொடுமைகளை,பிற்போக்கு

நிலவரங்களே உணர்வு பூர்வமாகக் காணும் சகல கட்சியினரும், சகல பகுதி மக்களும் ஒன்றுபட்டு பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாகவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

ஜாதீய முறையை விரும்பாத, ஜாதீய முறையை எதிர்க்கிற

தம்மைப் பொறுத்த முறையில் ஜாதீய முறையை ஒழித்துவிட்ட எல்லாப் பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மாத்திரமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. ::கம்யூனிஸ்டுகளோ, திராவிடக் கழகத்தார்களோ, திராவிட முன்னேற்றக் கழகத்தார்களோ மட்டுமல்ல, ஜாதியை ஒழிக்க விரும்புகிறார்கள், பாடுபடுகிறார்கள். சோஷலீஸ்டுகள், பிரஜாசோஷலீஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார் முதலியவர்களும் ஜாதி ஒழிப்புக்கே நிற்கிறார்கள். ஏன், காங்கிரஸ்காரர்களிலும் பெரும்