பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் முன்னேற சில பல நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என்பதையும் நான் மறுக்க வரவில்லை. ஆனால் தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயே முதன் முதலாக தொழிற்சங்கங்களின் மூலமாகவும் இன்னும் விரிவாக நாட்டுப்புறங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவும், சமுதாயத்தின் அடித்தட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதி இந்துக்களையும், சாதியை மறந்து, குறிப்பிட்ட லட்சியத்திற்காக ஒன்றுபட்டு நின்று போராட, இரத்தம் சிந்த, உயிர் கொடுக்க, போராட்டத்தின் மூலம் வெற்றி காணச் செய்த பெருமை கம்பூனிஸ்டுக் கட்சிக்குத்தான் உண்டு என்று பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன். (பலத்த கை தட்டல்) இது இருக்கட்டும்.

இந்திய அரசியல் சட்டம், அனைத்திந்தியாவிலுமுள்ள ஒவ்வொரு

குடி மகனுக்கும், ஒவ்வொரு குடி மகளுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் என்று பல உரிமைகள் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமைகளை அனுபவிக்க உத்தரவாதம் இருக்கிறதா ! அதுதான் இல்லை. கோடானு கோடி பின் தள்ளப் பட்ட மக்களுக்கு, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுகின்றன.

சமுதாய வாழ்வின் முதுகெலும்பாக, நகரங்களில்

தொழிலாளிகளாகவும், நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாகவும் மிகப் பெருவாரியாக விளங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. பொதுக் கிணறுகளை உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோலுள்ள இன்னும் பலவகைகளில் அவர்களுக்கு ஜீவாதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பேச்சுப் பல்லுக்காக வெளிச்சம் போட்டபோதிலும் பத்து ஆண்டுகள் தாண்டிய பிறகும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில் நடைமுறை, இந்தத் துறையில், நொண்டியடிக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

இந்த நிலமைகள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட

மக்களுக்கு ஜீவாதார உரிமை உத்தரவாதமாக, அனுபவ பாத்தியமாவதற்கு, பாடுபடவேண்டியது கட்சி, ஸ்தாபன, வேறு பாடுகளோ மாறுபாடுகளோ காட்டாமல், சகல ஜனநாயகவாதிகளுடையவும் கடமை என்றும், எங்கள் மாநாட்டின் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் தமிழ்ப்பெரு மக்களுக்குப் பணிவன்புடன் எடுத்துக்காட்டுகிறது.

         ஜனசக்தி பிரஸ், 32, பிராட்வே, சென்னை-1.