பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மடையர்‌ பழைமை மாயவேண்டும்‌; அதற்குரிய மார்க்கம்‌ புதுமைபெற வேண்டும்‌ - வேறென்ன வேண்டும்‌ (உடனடி)


நாயென்றும்‌ பேயென்றுமே நங்கையரைப்‌ பழிப்போர்‌ வாயடங்கிட வாழவேண்டும்‌ - வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

பாவிகள்‌ பெண்க ளென்னும்‌ பாதகர்‌ வாய்க்கொழுப்பை தூவென்‌ றுமிழும்‌ திறன்‌ வேண்டும்‌- வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

பெண்ணைக்‌ கன்னாபின்னா வாய்ப்‌ பேசித்‌ திரியும்‌ வம்பர்‌ கன்னத்தோர்‌ அறைவிழ வேண்டும்‌- வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

தட்டு முட்டுச்‌ சாமான்போல்‌ தையலரைப்‌ பாவிக்கும்‌ முட்டாள்‌ தன மகல வேண்டும்‌- வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

சின்னத்தன மாய்ப்‌ பெண்ணை சித்தரிக்கும்‌ நூற்களை இன்னே தெருப்பிலிட வேண்டும்‌ - வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

பேணும்‌ சம சந்தர்ப்பம்‌ பெருகும்‌ சுதந்திரத்தால்‌ ஆணும்‌ பெண்ணும்‌ இன்புற வேண்டும்‌ -

வேறென்ன வேண்டும்‌ (உடனடி)

123