பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது சீனத்திலே-நாசவேலை இப்போது எவ்விடத்தும்! பீரங்கிக் கோட்டையிலே--இப்பேய்கள் போரங்கி பூண்டிருந்தே பாரெங்கும் தன்கொடுங்கோல் - பரவிடப் படை எறிந்துறுமும்! கொள்ளைக் காரச்சயித்தான்- பயங்கரக் கொம்பேறி மூர்க்கனோடு கள்ளக்கரும் பூதம்-ஒன்றான காட்சியே பாசிசப்பேய் ஆகாயத்தின் மேலே-சென்றிரைந்து அலறிடும் ஒரு பேய் வேகமாய் குண்டெறிந்தே--அழிவுகள் விளைத்திடும் ஒரு பேய் செங்குருதிக் கடலில் - வீரர் தமை முங்கவைக்கும் ஒரு பேய் எங்கும் பொதுமக்களை-பலிகொண்டு ஏப்பமிடும் ஒரு பேய் நச்சுப் புகைவீசி-மூச்சடைக்க நாசம் செய்யும் ஒரு பேய் பச்சைக் குழந்தைகளை-பெண்டிர் தமைப் பங்கம் செய்யும் ஒரு பேய் ஆசியனாம் ஒரு பேய்-சுத்தரத்த ஆரியனாம் ஒரு பேய் தேசிய சோஷலிசம்-உலகுய்யச்

139

139