பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது உலகக் கனவு இந்தப் பாட்டு பிறந்தது 1934-ல் இது பிறப்ப தற்குச் சுவை சொட்டும் ஒரு சிறிய வரலாறு உண்டு. சுயமரியாதை சமதர்மப் பிரச்சாரம் சூறாவளிப் பிரச் சாரமாய் நாட்டில் நடத்த காலம். இந்தப் பிரச்சாரத்தால் மக்கள் உணர்ச்சி கலக்கி மறிக்கப்பட்டது. சமதர்மப் பிரச் சாரம் என்றால், பட்டணத்திலாயினும் சரி, பட்டி தொட்டி விலாயினும் சரி ஆயிரமாயிரமாக மக்கள் வந்து குவிந்து பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பது மாதிரி மொய்த்துக் அடிவயிற்றில் கிடந்த காலம். அதிகார புளியைக் கரைத்த காலமும், முறைப்பேய், வர்க்கத்திற்கு ஆட்சியாளர்களின் அடக்கு கொடிய நகங்களையும் கோரப் பற்களையும், நீட்டி, சமதர்மிகள் மீது பாய்ந்த காலமும் இந்தக் காலம் தான். “குடி அரசு" பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக Misal திரு ஈ. வே. ரா. கைது செய்யப்பட்டார். "குடி அரசு" நிறுத்தப்பட்டது. உடனே "புரட்சி" என்ற பத்திரிகை தொடங் கப்பட்டது. அதில், அன்று பஞ்சாலைத் தொழிலாளர் பொது வேலை நிறுத்தத்தை ஒட்டித் தோழர் ஜீவா எழுதிய "குருட்டு முதலாளிகளும் செவிட்டு சர்க்காரும்" என்ற கட்டுரைக்கு காக 2000 ரூபாய் சர்க்காரால் ஜாமீன் கேட்கப்பட்டது. புரட்சியும் நிறுத்தப்பட்டது; உடன் “பகுத்தறிவு' என்றற பெயரால் ஒரு வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. 28-10

1451

145