பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளி தன்நிலை கூறல் வர்க்க உணர்ச்சி பெற்றுவரும் தொழிலாளி எப்படிப் பிரதிபலிக்கிறான் என்பதை இப்பாட்டுக் காட்டுகிறது. தனது சகோதரத் தொழிலாளியிடம் தொழிலாளி மக்களின் இரங்கத் தக்க நிலைமையை நெஞ்சுருகச் சொல்லும் நிலைமையில் அமைந் துள்ளது இந்தப் பாட்டு. இந்தப் பாட்டு 1934 இறுதியில் பிறந்தது. பல்லவி பூச்சி புழுக்களுமே சீச்சீயென்று மிழ்ந்திட ஆச்சு நம்வாழ்வு தோழனே அனுபல்லவி ஏச்ச மனிதரெல்லாம் இறுமாந்து கொழுக்கிறார். காச்ச மனிதர் நச்சுக் கனியெனப் பழுக்கிறார் சரணங்கள் சஞ்சலப் பேய்நம்மை நவறாமல் வதைக்குது தரித்திரப் பேய்வாழ்வை அரித்துச் சிதைக்குது கொஞ்ச மல்லபசி தினசரி வதைக்குது கொடுமையை நினைந்திடக் குலையெல்லாம் பதைக்குது 79 (பூச்சி) (பூச்சி)

(பூச்சி)-

79