உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. சரியில்லை எனத் திருச்சியில் உள்ள அரங்கசாமி முதலியாருக்குச் செய்தி அனுப்பச் செய்தார். நடேசன் என்பவர் அவ்வழியேவந்த ஒரு சிற்றுந்து மூலம் திருச்சிக்கு விரைந்தார். உடனிருந்தவர்களின் கண்கள் குளம் ஆயின. பழநி அன்பர்கட்கும் செய்தி பறக்கவே, அவர்கள் மருத்துவர் (டாக்டர்) ஒருவரை அழைத்துக் கொண்டு ஒடோடி வந்தனர். மருத்துவர் அடிகளாரின் உடல் நிலையை ஆய்வு செய்தார். அவருடைய கண்களும் நனையத் தொடங்கியதைக் கண்ட அன்பர்கள், எவ்வாறு உள்ளது - எவ்வாறு உள்ளது எனப் பதறித் துடித்து வினாவினர். மருத்துவர் அளித்த பதில் இதோ: “Diabetic coma – Suddenly developed – no blood in his body at all – Wonder how he was able to lecture for four hours daily for a whole week - so sorry – can’t help – heart failure”. இதன் தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு: 'நீரிழிவு நோய் திடீரென முற்றிவிட்டது. உடம்பில் சிறிதும் குருதியே இல்லாதிருந்தும், நாடோறும் நான்குமணி நேரம் எவ்வாறு தொடர்ந்து சொற்பொழிவாற்றினார் என்பது வியப்பாயுள்ளது. மிகவும் வருந்துகிறேன். இனி ஒன்றும் செய்ய இயலாது. இதயம் நின்றுவிட்டது (உயிர் இல்லை) - என்பதாகும். ஞானியார் அடிகளார் தம் சொற்பொழிவின் இறுதி யில் பின்வரும் பாடலையும் கூறுவது உண்டு: 'ஏழைக்கு இரங்குதெய்வம் என்றுன்பால் வந்தடைந் தேன் ஏழைக்கு இரங்க இது தருணம் ஊழை வென்ற சிலமுனி வோர் போற்றும் தென்பழநி வெற்பில் உறை நீல மயில்முருகா நீ'