உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 மூலமாகப் பழக்கூடைகளைப் புலிசைக்குப் பங்குக் குறிப் புடன் அனுப்பி விடுவார். அப்போதும் நாங்கள் இலவசப் பழவணிகர்களாக மாறிவிடுவோம். எங்கட்கும் நிரம்பப் பங்கு உண்டு. இந்தப் பணியை நாங்கள் மிகவும் பெருமை யாக எண்ணிக் கொள்வோம், அடிகளாரைக் காணவருபவர்கள் மிகுந்த அடக்க ஒடுக்கத்துடன் எதிரில் அமர்ந்து உரைகளைக் கேட்பர். தாங்கள் ஏதாவது கூறுவதாயின், கைகட்டியும் அல்லது வாய் பொத்தியும் மெதுவாகக் கூறுவர், பரிசுகள் அடிகளார்க்குப் பலர் பல்வேறு சிறப்புப் பரிசுகள் தந்துள்ளனர். புதுவைச் செங்குந்த மரபினர், அடிகளார் பூசனை புரியும் முருகன் திருமேனிக்கு வெள்ளித் திரு வாசிகை செய்தளித்தனர். கொங்கு நாட்டுச் சேந்தமங்கல ஆண்டு விழாவில், பொன் உறை(கவசம்) வேய்ந்த உருத் திராட்ச மாலை அன்பர்களால் அளிக்கப் பெற்றது. முருகேச நகர் பழனியாண்டி முதலியாரும் புதுக்குப்பம் முத்துசாமி நாயுடுவும் சேர்ந்து, அடிகளாரின் மார்பில் தொங்கும் தங்கச் செச்சை செய்து அளித்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வெள்ளி விழாவின் போது, எளிதில் சுமந்து செல்லக் கூடிய சிவிகை ஒன்று செய்தளித்தனர். வடமங்கலம் சமீன்தார் பெரிய சிவிகை ஒன்று செய்து கொடுத்தார். அடிகளார் தென் தமிழ் நாட்டுச் செலவின்போது கோட்டாறு என்னும் ஊரில் ஒரு நாள் தங்கினார். அடிக ளார் சொற்பொழிவில் தேனில் விழுந்த வண்டென மயங்கி அன்பு செலுத்திய கோட்டாறு வேலாயுத முதலியார் என்பவர், சிறந்த ஒவியர்களைக் கொண்டு அடிகளாரின் திருவுருவத்தைப் புல விதமாக எழுதச் செய்து படங்க