உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'l 15 தாமே இருந்து ஊட்டுவதை வேறு எந்த ஆதீனத்தில் காண முடியும்? ஒருமுறை நானும் என் நண்பர் ஒருவரும் திருப்பாதிரிப்புலியூர் சென்றிருந்தோம். முன் தகவல் கொடுக்கவில்லை. அடிகள் தாம் நடத்தும் பாட சாலையில் மாணவர்களைப் பரீட்சை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவ்வூர்ச் சத்திரத்தில் போய்த்தங்கினோம். எப் படியோ அதனைக் கேள்வியுற்ற அடிகள், எங்களுக்கு ஆள் அனுப்பித் தங்கள் ஆதீனத்துக்கு அழைத்துத் தாமே இருந்து விருந்தளித்தார்கள்.மற்றொரு முறை திருவண்ணா மலையில் எங்களுக்குத் தாமே விருந்தளித்த ஓர் அன்புத் தோற்றத்தை என்ன என்று கூறலாம்! அதனை எக்கால மும் மறக்க முடியாது’ என்பது கோவைகிழாரின் உரை. இவ்வாறு இன்னும் பலர் எழுதியுள்ளனர் - ஒன்று போதுமே. பல ஆண்டு கட்கு முன்கண்டவர்கள் வரினும், அவர்களை நினைவில் வைத்துக் கொண்டு வரவேற்பார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியே நோக்கி நலம் விசாரிப்பர்கள். அடிகளாரின் நினைவாற்றலைப் பற்றிக் கோவைகிழார் தம் கட்டுரையில் அறிவித்திருப்பது வருமாறு: கினைவு: - 'அடிகளாரது தோற்றம் மிகவும் கம்பீரமானது அதனைக் கண்டு ஆனந்தித்தவர்கள் அவர்களது பதத் திற்கு ஏற்ற ஒரு தோற்றம் என்று எண்ணுவார்கள். ஒரு முறை பார்த்த பிறகு அத்தோற்றத்தை எக்காலமும் மறக்கமாட்டார்கள். அதுபோலவே, அடிகளாரும் ஏனை யோரை ஒரு முறை பார்த்த பின்பு எக்காலமும் மறக்கவே, மாட்டார்கள்.அவ்விதமான அபார சக்தி வேறெவரிடத்தும் பார்த்தல் அரிது. முதல் முறை அடிகளாரை அடிய்ேன் கண்டது, கோவைக்கு அடுத்த திருப்பேரூர் மாசிமகத் திரு விழாவின்போது. அடிகள் என்னை அறிந்ததும் அப்போது தான். பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்பு, திருவதிகையில்