உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 கால்படாத கருவூலம் அருளகத்தில் பொருள் (பணம்) வைத்திருக்கும் கருவூல அறை உண்டு. அந்த அறையில் பல்லாண்டுகளாக அடிகளாரின் கால்கள் பட்டதில்லை. அடிகளாரின் தாய் மாமன் பழநியாண்டி ஐயரும் அத்தை அமிர்தம் அம்மை யாருமே அருளகத்தின் வேலைகளை யெல்லாம் கவனித்து வந்தார்கள்; அடிகளாரைப் பெற்றோர் போலவே பேணிக் காத்தனர். அதனால், அடிகளார், வரவு செலவுக் கணக்கு வைப்பு, வேண்டிய பொருள்கள் வாங்குதல் முதலிய வேலைகளுள் எதுவும் இன்றி, (அதாவது குடும்பக் கவலை இல்லாதவர்கள் போல்) பாடம் நடத்துதல் - சொற் பொழிவு செய்தல் ஆகிய தமிழ்ப் பணியும் சமயப் பணியுமே கவனித்து வந்தார்கள். பணத்தைத் தொட்டுக் கையாள் வதற்காக அடிகளாரின் கால்கள் கருவூல அறைக்குச் செல்வதே இல்லை. இந்நிலையில், அடிகளார் இறுதி எய்தற்கு மூன்று ஆண்டுகட்கு முன்பே மாமா காலமாகிவிட்டார். பின்பு தக்கவர் யாரும் உடன் இன்மையால் அடிகளாரே அருளக மேற்பார்வைப் பொறுப்பையும் கவனிக்க வேண்டிய தாயிற்று. அடிகளாரின் கால்கள் கருவூலத்திற்கும் சென்று வரத் தொடங்கின. அப்போது ஒரு நாள், கருவூலத்தில் இருந்த ஒர் ஆணி அடிகளாரின் ஒரு காலில் தைத்துப் புண்ணாக்கிவிட்டது. இவ்வளவு நாள் ஏன் வரவில்லை எனக் கருவூல அறை வஞ்சம் தீர்த்துக் கொண்டதுபோல் இது நிகழ்ந்துவிட்டது. அடிகளார்க்கு, மாமா மறைந்த மனப் புண்ணோடு,இந்தக் கால் புண் ஆறவும் பன்னாட்கள் தேவைப்பட்டன. ஏழை பங்காளன் அடிகளார் ஏழை மாணாக்கர் பால் மிக்க இரக்கம்