உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மனம் பதியும் வண்ணம் பேசுதலில் மிகவும் சதுரப் பாடு டையவர்கள். - கடவுட் பக்தியும் சிறப்பாக முருகப் பெருமானிடத்துப் பேரன்பும் உடையவர்கள். கல்வியறிவுடையோரை நன்கு மதித்து அளவளாவும் இனிய குணம் உடையவர்கள். தமிழ் மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும் தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்களின் அரிய சொற்பொழிவுகள், இத்தமிழ்நாட்டில் நிகழாத இடம் இல்லை என்றே சொல்லலாம். மடாதிபதிகள் செய்ய வேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதி பதிகள், இவர்களின் முறையைப் பின்பற்றுவார்களாயின், தமிழ் உலகத்துக்கே சிறந்த பயன் விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோருக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளதென்று கூறலாம். . இவர்களிடத்துக் கல்வி பயின்ற மாணவர் பலரும் செர்ற்பொழிவு கேட்ட அன்பர்கள் பலரும் இவர்கள் பாற்கொண்டுள்ள பேரன்பு அளவிடுந்தரத்த தன்று. அதற் குக் காரணம் இவர்களுடைய அருட்குன நிலையேயாகும். இவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத தொன்று என்றே கூறல்ாம்.இத்தகைய பெரியார் ஒருவரை இனிக் காண்டல் எஞ்ஞான்று கூடுங்கொல்! திருவருள் துணை செய்தல் வேண்டும். முருகப் பெருமானிடத்து இவர்களுக்கிருந்த பேரன்பே, பழநிப்பதியில் அப்பெருமான் தரிசனப்பேறு இவர்கட்கு இறுதிக் காட்சியாக நிகழ்தற்குக் காரணமாயிற்று. இவர்கள் நல்லுயிர் திருவருளிற் கலந்து இன்புறுமாயினும், திருமேனியின் மறைவு தமிழ்ச் சைவ மக்களுக்கு ஆற்றொணாத்துன்பம் தருவதொன்றாகும். என்னே, நிலையாமையின் இயல்பு இருந்தவாறு!