பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஞானியார் பெருமை (பண்டித ரத்னம் - குகபூர் புழலை திருநாவுக்கரசு முதலியார்) “சைவ சமயத்திற்கும் செந்தமிழ் மொழிக்கும் இலக் கியமாக எழுந்தருளியிருந்த ரீமத் ஞானியார் சுவாமிகள் சிவலிங்க ஐக்கியமான செய்தி தமிழகத்தவரைத் திடுக்கிடச் செய்து விட்டது. சுவாமிகள் நிறைந்த பெரும் புலமையும் சிறந்த பேரறிவும் படைத்தவர்கள். தமிழ் மொழியில் தமக்கு ஒவ்வுவமையில்லா நிலைபெற்றிருந்த அடிகள். அங்ங்னமே ஆங்கிலம், ஆரியம் போன்ற பிற மொழிகளி லும் புலமை பெற்றிருந்தார்கள். சுவாமிகளுடைய பேச்சுக் குத் தமிழ் நாட்டில் தனி மதிப்பு. படித்தவர்கள் முதல் படியாத பாமரர்கள் வரை எல்லோரும் கேட்டு இன்புற்று மகிழும் வண்ணம் பேசுவதில் சுவாமிகள் இணையற்றவர் கள். இங்ங்ணம் சிறந்த சுவாமிகள் எளிமையாக அனை வரையும் ஏற்றுக்கொள்ளும் பெருமையும் உடையவர்களாக இருந்தார்கள். எங்குச் சென்றாலும் எங்கிருந்தாலும் எளியே னிடத்துள்ள அன்பின் மிகுதியைக் காட்டும் திரு நீற்றுப் பிரசாதத்தைத் தங்கள் ஆசி மொழிகளுடன் அவ் வப்பொழுது அனுப்பி வைத்து என்னை வாழ்வித்த தொன்றே, சுவாமிகள் எல்லோரையும் அணைத்து ஆதரித்து மகிழும் பெரும் பேற்றை இயல்பாகவே பெற்ற வர்கள் என்பதை நிரூபிக்க வல்லது. சுவாமிகளின் பிரிவி னால் தமிழகம் சிறந்த புலவர் பெருமானார் ஒருவரை இழந்தது - ஞானியார் மடாலயமும் சிறந்த தலைவரை இழந்தது - நாம் அனைவரும் தாயனைய - தந்தையுமாய பேராசிரியரை இழந்தோம் - என்று சொன்னால் பிழையா காது. அடிகள் என்றும் பிறவாத - இறவாத நன்னிலை எய்தி மாண்புறத் திரு முருகப் பெருமான் திருவடிப்பேறு "ளை வணங்குவோமாக - வாழ்த்துவோமாக’.