பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஞானியார் மடத்தின் தலைவராய்மர்ந்து ஐம்பத்திரன் டர்ண்டு சமயப் பணி புரிந்த அருட் செல்வரும், இள மாணவர் முதல் முதியோர் வரை - தம்மையடைந்தோர் யாவருக்கும் தமிழறிவு உறுத்திய தவச் செல்வரும், தமி ழும் சமயமும் வளர்ந்தோங்குதற் பொருட்டுக் கல்லூரி நிறுவியும் - பல கழகங்களைத் தோற்றுவித்தும் - யாவரும் உண்மைப் பொருளை எளிதில் உணர்ந்து நன்னெறியில் ஒழுகுதற்கு ஏற்ற இனிய அருள் மொழிகளைத் தமிழ்நாடு எங்கணும் பரப்பியும்-ஒய்வின்றித் தொண்டாற்றிய பேரரு ளாளரும், நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டு விழாவிலும் வெள்ளி விழாவிலும் தலைமை தாங்கி நல்லுரை கூறிப் போற்றிய தமிழ்ப் பெருந்தகையும் ஆகிய உய்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் எனப் பெயரிய அருள்மிகு ஞானியார் அடிகளார் அவர்கள் 1-2-42 ஞாயிறன்று பழநியிலிருந்து எழுந்தருளி வரும் பொழுது திடீரென இறைவன் திருவடி நீழலிற் கலந்து நம்மைப் பிரிந்த செய்தி கேட்டுக் கரந்தைத் தமிழ்ச் சங்க சார்பில் 3-2-42-இல் கூடிய தமிழ் மக்கள் அனைவரும் ஆற்றொணாத் துயருறுகின்றனர். 24. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் திருக் கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்துத் தலைவரும், சிவ ஞானச் செல்வரும் குலம் கொடி என்பவற்றின் உயர்வும் தாழ்வும் - பால் வேற்றுமையும் பாராட்டாது - யாவர் மாட்டும் பேரருள் பூண்டு - தமிழ்க் கல்வியும் சமயநூல் உணர்ச்சி யும் வரையாது வழங்கி வந்த வள்ளலாரும், தமிழ் மொழியேயன்றி வடமொழி - தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் வல்லுநரும் ஆகிய மறைத் திருவாளர்