உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

தொடங்கினார். ஒரு மணி நேரம் பேசினாலேயே பெருமூச் செறிந்து இடையிடையே எதையாவது குடித்துக்கொண்டு மின் விசிறியை விட்டகலாதிருக்கும் பெருமக்கள் நிறைந்த இவ்வுலகில், அடிகளார் ஒரே மூச்சாக நான்கு மணிநேரம். ஐந்து மணி நேரம்-இடையில் எதுவும் பருகாதுதொடர்ந்து சொற்பொழிவாற்றுவார். இவ்வாறு பலநாள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். யார் வேண்டுமானாலும் எவ் வளவு நேரம் ஆனாலும் தொடர்ந்து சொற்பொழி வாற்றலாம்-ஆனால், கேட்பதற்கு ஆள் வேண்டுமே. மக்கள் ஐந்துமணி நேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்பதென்றால், மிகவும் கவர்ச்சியான - சுவையான - பயன்மிக்க கருத்து களை வரையாது வாரி வாரி வழங்க வேண்டு மல்லவா? அதைத்தான் அடிகளார் ஆற்றி வந்தார்.

 ஒரு நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி இரவு 9 மணிக்கு மேலும் சொற்பொழிவாற்றுவதோடு அடிக ளாரின் பணி அமைந்துவிடவில்லை. நாடோறும் முற்பக லிலும் பிற்புகலிலும் இடையறாது மாறி மாறி வரும் மாணாக்கர்கட்கு மணிக்கணக்கில் பாடம் கற்பிப்பதிலும் பொழுதைச் செலவிடுவார். மாணாக்கர் குழுவில் எளிய இளைஞர்களும் இருப்பர் - அரக் உயர் அலுவலர்களும் இருப்பர்.
 சொற்பொழி வாற்றும் நேரம் போக - பாடம் 'கற்பிக்கும் நேரம்போக - எஞ்சிய நேரங்களிலும் இடையறாது பலர் வந்து அடிகளாருடன் உரையாடிக்கொண்டிருப்பர். ஒவ்வோர் உரையாடலும் ஒரு பாடம் போலவே - ஒரு சொற்பொழிவு போலவே சுவை மிக்கதாய் - பயன் நிரம்பி யதாயிருக்கும். இந்தப் பணிகள் திருப்பாதிரிப் புலியூரில் மட்டுமன்று அடிகளார் செல்லும் ஊர்களிலெல்லாம் நடைபெறும். ஒராண்டு - ஈராண்டு காலமன்று - தமது