உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



17

'எனக்குத் தமிழில் பேச வராது என்று சொல்வதைப் பெருமையாகக் கருதி வந்தனர். ஆங்கில வெள்ளத்தில் தமிழ்ப் பயிர் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது.

 அப்போது அடிகளார் தமது வாணி விலாச சபை வாயிலாகத் தமிழ்ப் பயிருக்குப் புத்துயிர் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சபையில் பாண்டித் துரைத் தேவர், உ.வே.சாமிநாதஐயர், ப.வே.மாணிக்கநாயக்கர், கோ. வடிவேலு செட்டியார், ரா. பி சேதுப்பிள்ளை முதலிய பேரறிஞர்கள் வந்து தலைமை தாங்கியும் சொற்பொழிவாற்றியும், தமிழ் வளர்ச்சிப் பணியில் தத்தம் பங்கை ஆற்றினர்.

சைவ சித்தாந்த மகா சமாசம்:

 சைவ சித்தாந்த மகா சமாசம் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ஒரு பெரிய இயக்கமாகும். இப்போது திராவிட இயக்கங்கள் ஆங்காங்கே கூட்டங்களும் மாநாடுகளும் நடத்துகின்றன. இவை அன்று இல்லை. இவற்றிற்குப் பதிலாக, அன்று, சைவ சித்தாந்த மகா சமாசம், ஆங்காங்கே சிறப்புக் கூட்டங்களும் ஆண்டு தோறும் மூன்று நாள் மாநாடுகளும் நடத்தி வந்தது. ஆண்டு மாநாடுகள் டிசம்பர் திங்களில் கடைசி மூன்று நாட்களில் நடைபெறும். ஆண்டுதோறும் ஏதாவது ஒவ்வோர் ஊரில் மாறி மாறி நடைபெறும். வெளியூர்களிலிருந்து ஏராளமான பேராளர்களும் (பிரதி திதிகளும்) அன்பர்களும் வந்து குழுமுவர். தொண்டர் படை அமைத்து, வருபவர்கட்கெல்லாம் வசதி செய்வித்து உண்டியும் உறையுளும் இலவசமாக வழங்கச் செய்வர்.
 திராவிட இயக்க மாநாடுகளில், கூட்டம் இறுதிவரை யும் இருப்பதற்காக, பெரியார் ஈ.வே. இராமசாமியும் அறிஞர் அண்ணாதுரையும் இறுதியில் பேசுவதுபோல,