உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27

 ம.ரா. குமாரசாமிப் பிள்ளை, திருக்கோயில்களில் உயிர்ப்பலி செய்தல் கூடாது என்னும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாயால் பேசுவது போதாது - செயலில் செய்து காட்ட வேண்டும் என அடிகளார் அறிவித்தார் - சேந்த மங்கலத் தில் உள்ள செல்லாண்டியம்மன் என்னும் பிடாரி கோயி லில் உயிர்ப்பலி கொடுப்பது வழக்கம். எஸ். ஆர். ஐராவத உடையாரின் முயற்சியால் ஆயிரக் கணக்கான ஆடு மாடு களைப் பலியிடுவது நிறுத்தப்பட்டது. அடிகளார் அகம் மகிழ்ந்தார்.
 ஆண்டு விழாவிற்குச் செல்வங் கொழிக்கும் நிலக்கிழார் பலர் வந்திருந்தனர். அடிகளாரின் பொழிவுத் தேனில் விழுந்து மயங்கிய வண்டுகளாகிய அவர்கள், முழுதும் பொன் உறை (பொற் கவசம்) போட்ட உருத்திராட்ச மாலை ஒன்றை அடிகளார்க்கு அணிவித்துப் பெருமை பெற்றனர்.

பேரூர்

 அடுத்து, கோவை சார்ந்த பேரூர் என்னும் ஊரில் உள்ள சாந்தலிங்க சுவாமிகள் சன்மார்க்க சபையின் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்திக் கொடுத்தார் அவ்விழாவிற்குக் கோவை இரத்தின சபாபதி முதலியார், அப்போது அமைச்சராயிருந்த டாக்டர் சுப்புராயன் முதலியோர் வந்திருந்து அடிகளாரின் சொல்லருவியில் திளைத்து உளங்குளிர்ந்து பாராட்டினர்.

ஆம்பூரில் 22 நாட்கள்

 பின்னர் அடிகளார் ஆரணி சென்றிருந்தார். ஆம்பூர்ப் பெரியவர்கள் சிலர் அடிகளாரை ஆம்பூருக்கு அழைத்துச் சென்று சிறப்பித்தனர். ஆங்குள்ள நாக நாத சுவாமி