உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

டிருந்த பொழுது, பெண் புலவர்கள் இயற்றிய பாடல் களும் வந்தன. அப்போது அடிகளார், பெண் மக்கள் கல்வி யறிவில் சிறந்து பாடல்கள் இயற்றும் அளவுக்குப் பெருமை பெற்றிருந்தனர் எனக் கூறிப் பெண்மையின் சிறப்பைப் பாராட்டினார். பாடம் கேட்டவர்களுள் சிலர், இந்தக் காலத்தில் அத்தகைய பெண்களைக் காண முடிய வில்லையே என்றனர். உடனே அடிகளார், அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? பெண்கட்குக் கல்வியளிப் பது தவறு என்னும் குறுகிய நோக்கம் உடையவர்கள் பலர் இன்று இருப்பதால்தான் பெண் கல்வி ஒங்க வில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்தார். குறுகிய நோக்கினர் பலர் இருந்தும், அடிகளாரிடம் பெண்கள் சிலரும் வந்து பாடம் கேட்டனர். பண்டிகை அசலாம்பிகை அம்மை யாரின் கல்விச் சிறப்பை அடிகளார் பாராட்டியது உண்டு.

முசுலீம் இளைஞன்:

 இங்கே சுவையான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். கூடலூரில் இருந்த முசுலீம் இளைஞன் ஒருவன் உயர்நிலைப்பள்ளி இறுதித் (S.S.L.C) தேர்வில் தமிழ் தவிர்த்த மற்ற பாடங்களில் நிரம்ப மதிப்பெண் பெற்றும் தமிழ்ப் பாடத்தில் 16 மதிப்பெண்ணை பெற்றதால் தோல்வியடைந்து விட்டான். அவன் தமக்குத் தெரிந்த, திருஞான சம்பந்தம் பிள்ளை என்பவரிடம் போய், தனக்குத் தமிழ்-தனிப்பாடம் (Private – Tuition) கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டினான். அவர் ஞானியார் அடிக் ளாரின் கல்விச் சிறப்பை விளக்கி அவரிடம் சென்றால் உனக்குத் தமிழ் கற்பிப்பார் என்று கூறி அவனை அடிக ளாரிடம் அனுப்பி வைத்தார்.
 அவன் ஒரு நாள் மாலை புலிசை அடிகளாரின்

அருளகத்திற்குச் சென்றான். அங்கே முன் கட்டில் ஒரு