உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

 "தாய தாகுமத் தையல் முன்னரே
  மாயவன் மகள் மற்றுன் மொய்ம்பினைத் 
  தோய நோற்றனள் சொற்ற எல்லையில் 
  போயவட் கருள் புரிதியால் என்றான்”-(63)
 என்பது பாடல் - என்றெல்லாம் சொல்நயமும் பொருள் நயமும் கூறி அடிகளார் சொற்பொழிவாற்றுவார்.
 சொற்பொழிவாற்றும் போது அடிகளார் தொடக்கத் திலும் இடையிடையேயும் அவையினரை 'மெய்யன்பர்களே' என விளிப்பார். தொடக்கத்திலும் முடிப்பிலும் இறைவணக்கப் பாடல்பாடுவார். சொற்பொழிவுகளில் சந்நிதி தொடக்கத்தில் பாடும் பாடல்களுள், திருப்போரூர்ச் சந்நிதிமுறையில் உள்ள பின்வரும் பாடல் இடம்பெறுவ துண்டு.

 "இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
   நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்தின்
   ஒன்றேனும் இல்லேன் உயர்ந்த திருப்போரூரா
   என்றேநான் ஈடேறுவேன்' - என்பது அப்பாடல்.

  மற்றும் தொடக்கத்தில்,

   'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
   விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
   விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மை
யினால்
   கண்ணிற் பணிமின் கனிந்து’.

  'உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகில்லேன்
   பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
   கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
   வேலப்பா செந்தில் வாழ்வே' -