உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



65

அவ்வருள். ஞானக் கொண்டலுக்கு உலகம் ஆற்றத் தக்க கைம்மாறும் உளது கொல்?நூற்றுக் கணக்கான தலைப்புக் களில் அடிகள் ஆற்றியுள்ள சொற்பொழிவுகளெல்லாம் எழுத்துரு வெய்தி நூல் வடிவில் வெளியிடப் பெறுமேல், அவை தமிழின் ஒப்பற்ற உரைநடை இலக்கியங்களாகத் திகழும் என்பது ஒருதலை. பல ஆண்டுகளாக மெய்யன்பர் பலரால் எதிர்பார்க்கப் பெற்றது இப்பணி.

 எடுத்துக் கொண்ட பொருளை வகுத்தும்.விரித்தும் விளக்குதல், அவற்றிற்குத் தென்மொழி வட்மொழிகளி லுள்ள உயரிய நூல்களிலிருந்து இன்றியமையா மேற்கோள் காட்டுதல், பலரும் அறியும் உவமைகளால் பொருளை விளங்கவைத்தல், உலக நடையுடன் சிறந்த நீதிகளை உளங்கொளச் செய்தல், சாத்திர நுணுக்கங்களை வரலாற்றோடு இயைவித்துத் தெளிவுறுத்தல், இடையிடையே எழுத்து - சொல் - பொருள் இலக்கண அமைதிகளும் குறிப்புப் பொருள் - அணி முதலியனவும் காட்டிச் செல்லுதல், மொழிப் பொருட் காரணம் தெரிவித்தல் - என்று இன்னோரன்ன சிறப்புக்கள் கற்போர் உள்ளத்தில் பசுமரத் தாணிபோல் பதியுமாறு இவற்றின்கண் அமைந் துள்ளன. செய்யுட்கட்கு உரை விரிக்கும் அடிகளின் போற்றலை, 'தோற்றம்' என்னும் கட்டுரைக்கண் 'மறைகளின் முடிவால்' என்னும் செய்யுட்கு எழுதிய விரிவுரையே நன்கு புலப்படுத்தும்.
 எனவே, இவற்றைக் கற்போர் இலக்கிய அறிவே யன்றி, இலக்கணப் பயிற்சி, உலகியலறிவு, தத்துவ உணர்வு, கடவுள் மாட்டன்பு முதலிய பல வகை நலங் களும் பெறுவர் என்பது உண்மை - உண்மை. 

கரந்தை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்

18–12–1941.