பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

தமிழ் அன்பையும் தமிழ் அறிவையும் ஊட்டியிருக்கிறார் கள். அரசாங்க உதவியின்றி ஒரு தமிழ்க் கல்லூரியும் நடத்தி வருகிறார்கள். ......... சுவாமிகளின் தமிழன்பு, தமிழ்ச் சுவையின் அனுபவ உணர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டது. ....... . பூர் ஞானியார் சுவாமிகளின் ஆழ்ந்த தமிழன்பில் குறுகிய சமயப்பற்று குறுக்கிடுவது கிடையாது. உண்மைக் கவிதைக்கும் வெறும் செய்யுளுக் கும் அவர்கள் நன்றாக வித்தியாசம் அறிந்தவர்கள். ஏதெதற்கு எந்த அளவில் மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவுதான் கொடுப்பார்கள். . . பூர் ஞானியார் சுவாமிகள் வீரசைவர்' ஆன போதிலும் மற்ற மதங் களைக் குறைத்துச் சொல்லும் வீரப் பிரதாபங்களை அவர்களிடம் காண முடியாது. சர்வமத சமரச ஞான முடைய உண்மை ஞானியார் அவர்.வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணத்தைச் சேர்ந்த பெரியார் என்றும் சொல்லவேண்டும்.

- பூரீ ஞானியார் சுவாமிகள் பட்டத்துக்கு வந்த ஐம்ப தாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டத்தைச் சென்ற 18-19உ களில், சுவாமிகளின் சீடர்களும் தமிழன்பர்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினார்கள். முறையே அறுபதாவது, எழுபதாவது, எண்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களையும் நடத்துவதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இறைவன் அருள் புரியவேண்டும்’- .

இது கல்கியின் ஆனந்த விகடன் கட்டுரைச் சுருக்கம். அடிகளாரின் உண்மைப் பெருமையைக் கல்கி மனந் திறந்து பாராட்டிப் புகழ்ந்துள்ளார். இறுதியில் அவர் அறுபது - எழுபது எண்பது கொண்டாடத் தமிழ் மக்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் - இறைவன் அருள்