இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிப்பெருங்கோ முடியரசன்
37
தண்டூன்றும் பெரியார்
தண்டூன்றிப் பெரியார் நடந்தார் - இங்குத்
- தண்டு
தொண்டுகிழம் கொண்டாலும் துவளாமல் நின்றார்
- தண்டு
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறப்பினில் ஓதும்
ஒருசிலர் வாழ்வினை உயர்த்திடும் வேதம்
தயங்குதல் இன்றிஅம் மாயையை வீழ்த்திடத்
- தண்டு
சாத்திரக் கோத்திரச் சண்டைகள் நாளும்
சாதிகள் மோதிட மண்டைகள் வீழும்
ஆர்த்தெழும் அய்யாவின் போர்க்குரல் சூழ
- தண்டு
19-6-79
19-6-79