பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

67



என்றெழுந்து சூளுரைத்த அண்ணா எங்கள் எழில்மொழிக்குக் காவலனாய் விளங்கக் கண்டோம் இன்றெழுந்த மொழிப்போரில் இவனை விட்டால் எமதுமொழி காப்பதற்கோர் தலைவ னில்லை ஒன்றுணர்ந்து சொல்கின்றேன். தமிழைக் காக்க உறுகழகம் ஈதன்றி வேறொன் றில்லை துன்றி.எழும் கழகத்தைக் காப்ப தற்கும் துயஒரு தமிழன்றி மற்றொன் றில்லை. பேரரசு வளர்ந்துவரும் ஒற்று மைக்குப் பிழைசெய்ய இந்தியினைத் திணித்தால் மக்கள் போர்முரசு கொட்டிடுவர் குருதி சிந்தப் பொங்கிடுவர் தமிழ்மாந்தர் சினந்தெ ழுந்தால் சாரரசு சடசடெனச் சரிந்த தைப்போல் சாய்ந்தொழியும் ஆணவத்தார் ஆட்சி யெல்லாம் பேரரசு செயநினைத்தால் புகுந்து பார்ப்போம் பொன்றுவதும் யாரென்று துணிந்து பார்ப்போம். செப்புமொழி பதினெட்டுக் கொண்டாள் அன்னை சிந்தனைதான் ஒன்றுடையாள் என்று சொன்ன ஒப்பரிய பாரதியின் மொழியைக் கூட ஒழிப்பதற்கோ முனைகின்றீர்? இந்தி என்று செப்புமொழி ஒன்றாக்கி, அறிவு கெட்டுச் சிந்தனையைப் பலவாக்கி, வெறிய ராகித் தப்புவினை புரிகின்றீர்! தேயம் உங்கள் தனியுடைமை யன்றுபொது வுடைமை யாகும். தாய்மொழியாம் தமிழ்மொழியே முரசம் ஆகத் தமிழகத்துப் பண்பாடு கவசம் ஆக ஆய்முறைசேர் அறிவுபடைக் கலமே யாக அறிநெறியே வழிகாட்டும் துணையே யாகக் கூய்வருமோர் மொழிப்போரில் தலைமை தாங்கிக் கொடுமைகளைச் சாய்த்தொழிக்க எங்கள் அண்ணா தாய்வருமோர் காவலனாய் விளங்கக் கண்டோம் தலைவணங்கிப் பாடுதும்யாம் வாழ்க என்றே. அண்ணா 59 ஆவது பிறந்த நாள் விழா சென்னை. 17-9-1967