பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

95



ஆவிக்குள் ஆவியென ஆகிக் கடற்கரையில் மேவித் துயில்கொள்ளும் மேலோனைத் துாற்றுகிறான் ; தாயைப் பழிக்கத் தயங்காத மாபாவி வையாத் திறந்தினும் வைதே திரிகின்றான் ; 'பொய்யை முதலாகப் போட்டை அரசியலைச் செய்யுந் தலைவ' னெனச் செத்தபினும் திட்டுகிறான் ; பொய்யில் பிறந்தமனம் பொய்யில் வளர்ந்தஉடல் பொய்யால் வளர்உருவம் புத்தனையா ஏசுவது? அண்ணாவை மிஞ்சிவிட்டார் ஆரூர்க் கலைஞரெனப் பண்ணால் முடிபோட்டுப் பாடுகிறான் பாடட்டும் அண்ணா அமைத்த அருமைக் கழகத்தைக் கண்போற் கலைஞரவர் காக்குங் கழகத்தைச் சைத்தான் எனப்புகன்று சாக்கடையில் வந்தமொழி வைத்தான் நமக்கெதிரில் வாய்மூடி நிற்கின்றோம் ; தன்னலத்தால் இற்றைத் தலைவருக்குப் பூமாலை சொன்னலத்தால் சூட்டுகிறான் சூட்டட்டும் வாழட்டும் ; ஆனால் கழகத்தை அப்பேதை வாய்புளிக்க ஏனோ பழிக்கின்றான்? ஈதென்ன விந்தை! கலைஞர் இனிப்பாம் கழகம் கசப்பாம் நிலைபுரிய வில்லை.என் நெஞ்சம் பொறுக்கவில்லை ; பேதைத் தனமென்று பேசா திருப்பதா? போதைச் செயலென்று பூனைபோல் நிற்பதா? பேசா திருந்தவன்தான் பேதைத் தனமென்றே ஏசா திருந்தவன்தான் என்றாலும் எல்லையின்றிப் போதலால் என்றன் பொறுமை தனையிழந்தேன் ஆதலால் பாட்டுக்குள் ஆவேசங் காட்டிவிட்டேன் சூடு மிகையாகத் தோன்றுமோ என்பதனால் சாடும் முறையதனைச் சற்றே நிறுத்துகின்றேன்; அண்ணாவைப் போற்றுவோம் அண்ணன்வழி நிற்போம் கண்ணேபோல் எண்ணிக் கழகத்தைக் காத்திடுவோம் அய்யாவும் இன்றில்லை அண்ணாவும் இன்றில்லை மெய்யாக நம்மினத்தை மேலோங்கச் செய்பவரார்? என்றுநாம் ஏங்குகையில் ஈதோ இருக்கின்றேன் என்று குரல்கொடுத்தார் ஈரோட்டார் பேரரிவர் ; ஈடில்லா அண்ணன் இதயத்தைப் பெற்றுள்ள பீடுள்ளார் நம்விட்டுப் பிள்ளை எனஆனார்