உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

654

பகுத்தறிவு பகலவன் தந்தை


சுதந்தராக்கட்சி, ஜனசங்கக் கட்சி; வெங்காயக்கட்சி தமிழரசுக்கட்சி எவன் ஜெயிக்கிறானோ அவனோடு சேர்ந்து கொள்கிறது: முன்னேற்றக் கழகம் ஜெயித்தால் இவர்களோடே வேறு ஒன்று வந்தால் அவர்களோடே?

அருமைத் தோழர்களே இது நமக்குக் கடைசி முயற்சி என்று நினைக்கணும் இப்படியே சாகிறதைவிட ஈனத்தனம் வேறே இல்லை, ஆனதினாலே ஏதோ ஓர் கிளர்ச்சி செய்கிறேன் இப்போது நான். சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று அடுத்த மாதம் கூட்டுகிறேன். ஒன்றும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது அல்ல, பெரிய இலாபம் அடைகிறதற்கு அல்ல, நமக்கு இருக்கிற இழிவு போகணும்; அவமானம் போகணும். இப்போது நாம்தான் ஆள்கிறோம்; என்ன செய்ய முடிந்தது?

நம் இயக்கத்தினுடைய இலட்சியம் இந்த (டெல்லி) ஆட்சியை ஒழிப்பது! இதிலிருந்து விலகணும் என்று எவனாவது நினைத்தால், ஏழு வருஷம் தண்டிப்பேன் என்று சட்டம் போட்டானே, எனக்கும் அண்ணாதுரைக்கும் பயந்துதானே, அந்த மாதிரி போட்டான்!

என்னுடைய ஆசையெல்லாம், ஜெயிலிலே செத்தால் மோட்சம் அடைவேன் - இன்பம் அடைவேன். பின்னே எனக்கு ஒன்றும் இல்லை , அருமைத் தோழர்களே! நமக்கு இது ஒரு பரீட்சைக்காலம். சும்மாவே இருந்தால் என்ன ஆகிறது? இந்து மதம் இல்லை என்று அவன் அரசியல் சட்டத்தைத் திருத்தட்டுமே! சட்டத்திலே எல்லாவற்றையும் கட்டிப் போட்டுவிட்டு, அது சொன்னால் தப்பு; இது செய்தால் தப்பு; ஏழு வருஷம் என்றால் எப்படி இது ஒரு நாடாகும்.?

பெரிய கிளர்ச்சி நடந்தால்தான் விஷயங்களைச் சரி பண்ணிக் கொள்ள முடியும். இந்தக் கிளர்ச்சியை ஆரம்பிக்கிற இடந்தான் தமிழ்நாடே ஒழிய, ஒரு வருஷத்துக்குள்ளே இந்தியாவிலே பல இடங்களிலே இந்த நெருப்புப் பிடித்துக் கொள்ளும்! ஆகவே, இங்கே ஒரு ஐயாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனோம் ஆனால், மற்ற இடங்களிலும் பற்றிக் கொள்ளும். நம் இளைஞர்கள் எல்லாம் துணியணும் எல்லாம் பெண்களாகவே ஜெயிலுக்குப் போகணும். இது சமுதாய சம்பந்தமானது. உங்கள் குடும்பமோ, பிழைப்போ கலந்து கொள்ள இடங்கொடுக்கவில்லை என்றால், நம்மாலான உதவி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். மாநாடு நடத்த, உடனே நாம் ஒரு லட்ச ரூபாய் சேர்த்தாகணும்!

இன்று எனக்குப் புத்தி சுவாதீனம் இல்லை என்று கூடச் சொல்லுவேன்; என்ன பேசவேணும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. முந்தாநாள் பூரா ஒன்றுமில்லை; நேற்று