பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாதியை ஒழிக்க இயலாத காங்கிரசிடம்; வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையாவது அங்கீகரிக்கும் படி தொடர்ந்து போராடினார்.

காங்கிரசு அதற்கும் இணங்கவில்லை. இனி எதற்கும் காங்கிரஸ் அருகதையில்லை என்று பெரியார் விலகி விட்டார்.

'சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசு ஆட்சி வந்த பிறகும், அக்கட்சியால் ஏழை எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எந்தப் பலனும், சுதந்திரமும் கிட்டாது' என்கிற கருத்திலேயே பெரியார், சுதந்திர தினத்தை துக்க நாள்' என்று கூறினார்.

ஆயினும், 'இது சரியல்ல' என்று அண்ணா கருதினார். அண்ணா மட்டுமல்ல; கழகத்திலிருந்த பலரும் அப்படியே கருதினார்கள்.


31. முட்டையிலிருந்து பிறந்த முதல் குஞ்சு

"சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.

கணவன்- மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் அடிமை ஆண்டான் என்பது கிடையாது. இருவருமே சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல, நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது."

- தந்தை பெரியார்