பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

145


'சுயமரியாதைத் திருமணம்' செய்து கொண்ட மணியம்மை பெயரில் - ஈ.வெ.ரா. மணியம்மை என்று சட்டப்படி பதிவுத் திருமணம் செய்தார்.

இந்தச் செய்தியினை தமது குடியரசு பத்திரிகையிலும் பிரசுரித்து வெளியிட்டார்.

பெரியாரின் இச்செயல், திருமணத்தை எதிர்த்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்தது.

அண்ணா ஆடிப்போனார்.

ஏற்கனவே சுதந்திரதின கருத்து வேறுபாடுகள் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் பலருக்குமிடையே நீரு பூத்த நெருப்பாகவே இருந்தது.

இப்போது -

மணியம்மையாரின் திருமணம் அதை ஊதிப் பெரிய காட்டுத் தீயாக்கி விட்டது.

பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு, திராவிடர் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து தொண்டாற்ற முன் வந்தனர்.

அண்ணாவின் உவமைகளும், அடுக்குச் சொல் அழகும், பேச்சும் அவ்விளைஞர்களை மகுடி இசைக்கு மயங்கும் நாகமாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கழகத்தின் கண்மணிகளும்; அதுவரை பெரியாரோடு கருத்து வேறுபாடின்றி ஒன்றியிருந்த பலரும் வேறுபட்டனர்.

அறிஞர் அண்ணாவின் நிலையை நியாயப்படுத்தி அண்ணாவின் கரங்களுக்கு வலுவேற்றினர்.