பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தந்தை பெரியார்


தொடர்ந்து தன் தொண்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

1973-ம் ஆண்டு பிறந்தது. அது தமிழர்களின் நினைவில் என்றுமே மறக்க முடியாத ஆண்டாக நிலை பெற்று விடுமென்று யாருமே எண்ணவில்லை.

1973, டிசம்பர் 8, 9, 12 ஆகிய தேதிகளில், 'இன ஒழிப்பு மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொண்டு பேசினார்.

19.12.1973-ம் நாள் தியாகராய நகரில், 'சிந்தனையாளர் மன்றத்தின் மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார், உற்சாகத்துடன் அதில் கலந்து கொண்டார்.

- அதுவே, பெரியார் ஆற்றிய கடைசிச் சொற் பொழிவாக அமையும் என்று - அப்போது யாரும் கனவு கூடக் காணவில்லை.

நோயின் கடுமை, திடீரென்று தீவிரமடைந்து, தந்தை பெரியார் உடனடியாக வேலூரிலுள்ள, சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல மருத்துவர் குழாம் ஒருங்கிணைந்து போராடியும்; விடுதலை பெறத் துடித்த பெரியாரின் உயிரை நிறுத்தி வைக்க முடியவில்லை. 24.12.1973ம் நாள் காலை 7.31 மணி அளவில் தனது, 95-வது வயதில், லட்சக் கணக்கான மக்களைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு தந்தை பெரியார் அமரரானார்.

'பெரியார் வாழ்க’, என்று விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே, அரசாங்க மரியாதையுடன், முப்பத்தாறு முறைகள் பீரங்கி குண்டுகள் முழங்க,