பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


விலங்குகள்

யானை :

யானைகள் நீலகிரி மலையில் இப்பொழுது அதிகமில்லை. கோடையின் வெப்பத்தைத் தாளாமல், அடி வாரத்திலிருந்து இவை குந்தா பீடபூமிக்குக் கூட்டம் கூட்டமாக வந்து விடும். இப்போது சத்திய மங்கல மலைகளிலும், மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. யானைகளின் தொல்லையை ஒழிப்பதற்காக கி. பி. 1840-ஆம் ஆண்டு கோவை மாவட்டத் தண்டலராக இருந்தவர் சிட்டகாங்கிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, அவைகளைப் பிடிக்குமாறு செய்தார். அவுட்டர்லானிப் பள்ளத்தாக்கில்கூட யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, அங்கு காஃபி பயிரிடத் தொடங்கியதும் யானைகளின் வருகை ஒழிந்தது. நீலகிரிப் பீடபூமியின் வடபகுதியிலும் வய நாட்டிலும் இப்பொழுது அதிகமாக உள்ளன. பவானிப் பள்ளத்தாக்கிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி தென்படுவதுண்டு.

புலி :

நீலகிரியின் உச்சியிலும், தாழ்ந்த பீடபூமிகளிலும் புலிகள் சுற்றித் திரிகின்றன. மார்ச்சிலிருந்து ஜூன் வரை இவை அடிக்கடி தென்படும். கோடை வெப்பத்துக்கும், காட்டுத் தீக்கும் அஞ்சி இவை இம் மாதங்களில் உச்சியிலுள்ள பீடபூமிகளுக்கு வந்துவிடும். வய நாட்டுச் செட்டிகளும், பழங்குடி மக்களான பனியர்களும் புலிகளை வலை போட்டுப் பிடிப்பதில் வல்லவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வலிவான வலைகள் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும். தங்கள் ஊருக்கு அண்மையிலுள்ள காட்டில் புலி வந்திருந்தால், எப்படியும் இவர்களுக்கு அச்செய்தி தெரிந்துவிடும். உடனே வலைகளை எடுத்துக்