பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

துள்ளது. இங்குக் கலைமான்கள் நிறைய உண்டு. இம் மான்களின் கொம்புகள் வட இந்தியாவிலுள்ள மான்களின் கொம்புகளைப்போல் அதிக நீளம் வளர்வதில்லை. இருந்தாலும் 42 அங்குல நீளம் இருக்கின்றன. ஐரோப்பாவிலும் இவை போன்ற தோற்றமுடைய மானினம் உண்டு. அவைகட்கு எல்க் (Elk) என்று பெயர், உதகமண்டலத்தில் வந்து தங்கிய ஐரோப்பியர் இதையும் எல்க் என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வினம் மிகுந்து காணப்படும் இடத்தை எல்க் மலை (Elk Hill) என்ற பெயராலேயே அழைத்தனர். புள்ளி மான்கள் உயர்ந்த பீடபூமி களுக்கு வருவதில்லை. அவை மசினிக்குடிக்கருகில் காணப்படுகின்றன.

குரைக்கும் மான் (Barking deer) என்ற ஓரினம் இங்கு இருக்கிறது. ஆனால் நீலகிரி மலைவாசிகள் இதைக் 'காட்டாடு' என்ற தவறன பெயரால் அழைக்கின்றனர். முதன் முதலில் நீலகிரி மலைக்கு வந்த பழங்குடி மக்கள் இதைக் காட்டாடு என்று கூறியதால் அப்பெயரே நிலைத்து விட்டது. இவைகளும் கலை மான்களைப் போலவே, உதகமண்டலத்து வேட்டை நாய்களுக்கு அஞ்சாத முரட்டுத்தனம் வாய்ந்தவை. நான்கு கொம்புகளையுடைய மான்களும் இங்கு இருக்கின்றன. ஆனால் அவை மிகவும் அருகிக் காணப்படுகின்றன. சிறிய எலி மான்கள் (Mouse deer) சரிவுகளிலுள்ள அடர்ந்த காடுகளில் உள்ளன. ஆனால் குறைந்தே காணப்படுகின்றன. கருமான் (antelope) களும் சீகூருக் கருகில் குறைந்த அளவில் காணப்படு கின்றன.

காட்டெருமை:

சில சமயங்களில் காட்டெருமைகள் சத்தியமங்கலம் மலைகளிலிருந்து மேட்டுப்பாளையத்திற் கருகிலுள்ள காடுகளுக்கு வருகின்றன. ஆனால் மசினிக்குடிக் காடுகளிலும், வய நாட்டிற்கு வடக்கிலுள்ள முதுமலைக் காடு