பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

ஆனால் சேக்ஸ்பியர் அக் காட்டு மனிதனிடமிருந்த அரிய பண்புகளையும் புலப்படுத்துகிறார். காலிபன் இசைப்பிரியன்; காட்டு மொழியில் கவிதை பாடும் புலவன். சில சமயங்களில் அழகுணர்ச்சியோடும் பேசுகிறான். ஆனால் நாகரிகத்தின் பிரதிநிதிகளாக அத் தீவில் புகுந்தவர்கள் - அவனைவிட உள்ளத்தால் இழிந்தவர்கள், ஸ்டீஃபனோவும், டிரிங்குலோவும் குடிகாரக் கோமாளிகள், அந்தோணியோ வஞ்சகன். ஆலன்சோவின் வாழ்க்கை கறைபடிந்தது. இந் நாகரிகர்கள், பழங்குடி மகனான வாலிபனைக் கள் வெறியனாக்கிப் பிறகு நன்றி கெட்டவனாக மாற்றினர்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூசோ, "பழமை வாழ்வே பண்புடை வாழ்வு; அவ்வியற்கை வாழ்வை நோக்கிச் சென்றால் தான் எதிர்கால உலகம் அமைதியோடும் இன்பத்தோடும் வாழ முடியும்“ என்ற கொள்கையைப் பரப்ப ஓர் இயக்கமே (Back to Nature Movement) நடத்தினார். இவ்வாறு பழங்குடி மக்களைப் பற்றிச் சுவையான பேச்சுக்கள் பன்னிப் பன்னிப் பேசப்படுகின்றன.

படகர் :

நீலகிரியில் வாழும் வெள்ளையர் இவர்களைப் பர்கர் (Burgher) என்று அழைக்கின்றனர். வடக்கிலுள்ள மைசூரிலிருந்து வந்ததால் இவர்கள் வடகர் என்று பெயர் பெற்றனர் என்றும், அப்பெயரே படகர் எனத் திரிந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். மைசூர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகவும், அரசியலில் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், சமுதாயக் கொடுமை காரணமாகவும், மைசூரில் வாழும் லிங்காயத்தாரிடம் கொண்ட சமயப்பூசல் காரணமாகவும் இவர்கள் இங்குக் குடியேறினராகக் கூறப்படுகிறது, தோடர்களிடையே வழங்கும் பரம்பரைக் கதைகளில் படகரைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாத