பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209

நீர் ஒன்றாகக்கூடி இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்வதால் இவ்வாறு சண்முக (ஆறுமுக) நதி என்று பெயர் பெறுகிறது. இது பழனி நகரினிடையே ஓடுவதால், அப்பழனியில் கோயில் கொண்டிருக்கும் சண்முகனின் பெயரே இவ்வாற்றுக்கும் வழங்குவதாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்கூறிய ஆறுகள் நான்கும் மதுரை மாவட்டத்தின் வட எல்லையில் ஓடுகின்றன. மதுரை மாவட்டத்தின் நடுவில் வைகையும், அதன் துணையாறுகளும் ஓடுகின்றன. வைகையின் துணையாறுகளில் பல பழனிமடையில் தோன்றுகின்றன. வராக நதி, மேல் பழனிமலையில் தோன்றி, பெரிய குளத்திற்கருகில் பாம்பாற்றோடு கலக்கிறது, பாம்பாறும் பழனிமலையிலேயே தோன்றுகிறது. இவ்வாறு கோடைக்கானலுக்கருகில் ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. குதிரைப் பாதைக்கருகிலிருந்து காண்போருக்கு இந்நீர்வீழ்ச்சி பெருவனப்போடு காட்சி தரும். இவ்விரு நதிகளும் வைகையோடு கலக்கின்றன. மஞ்சளாறு என்ற வேறொரு நதியும் பழனிமலைச் சரிவில் தோன்றி ஓடி வருகின்றது. இதை வத்தலகுண்டு ஆறு என்றும் கூறுவர். இது தேவதானப்பட்டிக்கு மேல் 200 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து, ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. பாதையிலிருந்து காண்போருக்கு அவ்வீழ்ச்சி கண்கவரும் வனப்போடு காட்சியளிக்கும், பிறகு இவ்வாறு வத்தலகுண்டுவை நோக்கி ஓடி வருகிறது. கீழ்ப்பழனியிலிருந்து தோன்றிவரும் பிறிதோர் ஆறான அய்யம்பாளையம் ஆற்றோடு சேர்ந்து, மஞ்சளாறு வைகையில் கலக்கிறது.

காடுகள் :

பழனிமலைச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ஆனால் அவை இப்போது வாடியும், பெரும் பகுதி அழிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அள

கு.வ.-14